மீள் குடியேற்றம் மற்றும் விவசாய பயிர்ச் செய்கையில் எதிர் நோக்கும் பிரச்சனைகளை ஆராயும் கூட்டம். - Sri Lanka Muslim

மீள் குடியேற்றம் மற்றும் விவசாய பயிர்ச் செய்கையில் எதிர் நோக்கும் பிரச்சனைகளை ஆராயும் கூட்டம்.

Contributors
author image

பழுலுல்லாஹ் பர்ஹான்

புணானை  மேற்கு விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சனை தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்ற விடயங்கள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம் கடந்த 15-09-2014 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சாள்ஸ்  தலைமையில் நடைபெற்றது.

 

உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர்ஷேகுதாவூதின் வேண்டுகோளின் பேரில் நடைபெற்ற இவ்விஷேட கூட்டத்தில் புணானை மேற்கு விவசாயிகள் எதிர் நோக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டதுடன் பொத்தான கிராம மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பான விடயங்கள் விஷேடமாக ஆராயப்பட்டதாக உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சரின் பொது மக்கள் தொடர்பு அதிகாரி முபீன் தெரிவித்தார்.

 

புணானை மேற்கு விவசாயக் காணிகள் தொடர்பாக மகாவலி அதிகார சபையுடன் விஷேட சந்திப்பை எற்பாடு செய்வதாக அமைச்சர் பஷீர் இதன் போது தெரிவித்தார்.அத்துடன் பொத்தான மீள் குடியேற்றம் தொடர்பாக இடம் பெயர்ந்த மக்கள், மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளும் விஷேட கூட்டம் ஒன்றினை பொத்தானயில் நடத்துவதுதென தீர்மானிக்கப்பட்டது.

 

மேற்படி கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கிரிதரன், மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் மோகன்ராஜ், மாவட்ட வன இலாகா பொறுப்பதிகாரி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் தனபாலசிங்கம், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் நெடுஞ்செலியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் மாவட்டத்தில் காணப்பட்ட பிரச்சனைகளை எதிர் கொள்ளும் விவசாயிகள் பொது மக்களின் உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சரின் பொதுமக்கள் தொடர்பதிகாரி முபீனை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 

08

Web Design by Srilanka Muslims Web Team