முகக்கவசங்களைத் தவிர, புர்காவை தடைசெய்யும் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்..! - Sri Lanka Muslim

முகக்கவசங்களைத் தவிர, புர்காவை தடைசெய்யும் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்..!

Contributors

சுகாதார பாதுகாப்பு முகக்கவங்களைத் தவிர்த்து, ஏனைய வகையில் முகத்தை மூடுவதை தடை செய்வதற்காக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்ட மூலத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் முன்வைக்க உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிமுறைகள் தவிர்ந்த முகத்தை முழுமையாக மூடுவதனை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

முகத்தை முழுமையாக மூடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயமாகும்.

இதன் ஊடாக பயங்கரவாத நடவடிக்கையும் முன்னெடுக்கப்படலாம்.

ஏப்ரல் 21 தாக்குதலின் ஊடாக நாம் பாடம் கற்றுக்கொண்டுள்ளோம்.

இதுபோன்ற காரணங்களுக்காகவே முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.Posted in:

Web Design by Srilanka Muslims Web Team