முகத்திரைத் தடைக்கெதிராக முஸ்லீம் பெண் பிரான்ஸில் வழக்கு! - Sri Lanka Muslim

முகத்திரைத் தடைக்கெதிராக முஸ்லீம் பெண் பிரான்ஸில் வழக்கு!

Contributors

-bbc-

முஸ்லீம் பெண்கள் தங்கள் முழு முகத்தையும் மூடி மறைக்கும் முகத்திரையை அணிவதற்கு பிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிராக ஒரு முஸ்லீம் இளம் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

‘நிக்காப்’ மற்றும் ‘பர்க்கா’ என்ற உடலை மூடி மறைக்கு ஆடைகள் தனது மத நம்பிக்கை, கலாசாரம் மற்றும் தனிப்பட்ட நம்பிக்கை ஆகியவைகளின் ஒரு பகுதி என்று ஸ்ட்ராஸ்பர்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் அவர் தொடுத்த வழக்கில் கூறியிருக்கிறார்.

பெண்கள் உரிமைகளுக்கான சர்வதேச லீக் என்ற அமைப்போ, பிரான்ஸ் அரசு விதித்திருக்கும் இந்தத் தடை சரியானது என்று தீர்ப்பு வழங்குமாறு, நீதிமன்றத்தை வலியுறுத்தியிருக்கிறது.

இந்தத் தடை உத்தரவு பெண்களின் விடுதலைக்கானது என்று அது கூறுகிறது.
பிரான்ஸ் அரசு, 2011ல், பெரும்பாலான முகத்திரை ஆடைகளை பொது இடங்களில் அணிவதைத் தடை செய்தது. இந்த ஆடைகள் அணிபவர்களுக்கு அபராதங்களையும் அது நிர்ணயித்தது.

ஐரோப்பாவில் இரண்டாவடு பெரும் முஸ்லீம் சிறுபான்மை மக்கள்தொகை கொண்ட நாடாக பிரான்ஸ் இருக்கிறது.
அங்கு சுமார் 50 லட்சம் முஸ்லீம்கள் வசிக்கிறார்கள.

 

Web Design by Srilanka Muslims Web Team