முகத்திரையை வாஜிபா? » Sri Lanka Muslim

முகத்திரையை வாஜிபா?

face

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

முஹம்மத் பகீஹுத்தீன்


கொள்ளுப்பிடி பள்ளிவாசல் கருத்தழிந்தவர்களின் மடமா? சிந்தையை மறைக்கும் முகத்திரை வாஜிப் என்ற கருத்தை திணிக்கும் போது இந்த கேள்வி பிறக்கின்றது.

கொள்ளுப்பிட்டி மின்பருக்கு விசேட கொளுப்புண்டா? தீவிர சிந்தனையை பொறிப்பதற்கு சூடான சட்டியாக அந்த மின்பரை பாவிப்பது ஏன்? திரை விலகாத சிந்தனைகள் ஒன்று கூடும் பலிபீடமாக ஒரு மடாலயம் இருப்பது ஏன்?

கருத்து வேறுபாடுள்ள முகத்திரையை வாஜிப் என்று திரும்பத்திரும்ப திணிப்பதற்கு முயலும் முப்திகளுக்கு உலாம சபை உபதேசம் செய்வதில்லையா?

பொதுபல சேனா அடிப்படையில்லாத கருத்துக்களை சபைக்கு கொண்டு வந்த போது சட்ட மன்றம் ஆவேசத்துடன் எதிர்த்தது. ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து தீவிர சிந்தனைவாதிகளுக்கு விடை பகர்ந்தது.

வீட்டுக்குள்ளே அடிப்படை இல்லாத தீவிர கருத்துக்களை பேசும் முப்திகளுக்கு பச்சை கொடி காட்டுவது ஏன்?

உள்வீட்டு கருத்துத் தீவவாதம் தாலிபான்களை உருவாக்கியுள்ளது என்பதை நாம் புரிய நாளாகுமா? தீவிரத்தை வளர்ப்பதற்கு மின்பர் மேடையை முப்தி என்ற பட்டத்துடன் பாவிப்பது குற்றமில்லையா?

அசட்டுத்தனமான சிந்தனைகளை பரப்புரை செய்ய இடம் கொடுத்து விட்டு பின்னர் கைசேதப்படுவதில் அர்த்தமில்லை. 90 வருடம் பழை கொண்ட சட்ட மன்றம் சொந்தங்களின் கைகளாயே இடிக்கப்படும் ஆபத்தை தவிர்ப்போம்.

சிந்தனை சீர்திருத்தம் குறித்து கவனத்தை குவிப்போம். சிந்தனை தீவிரவாதம் பொல்லாதது. நாட்டை, வீட்டை அழிக்கக் கூடியது. வரமுன் காப்போன் புத்திசாலி. கோழைகளாக செத்து மடிவதற்கு இடம் கொடுக்கமால் நாட்டையும் வீட்டையும் காப்பபோம்

சவுதி சட்ட மன்னறம் வழங்கிய இறுக்கமான பத்வாக்கள் தீவிரத்தை வளர்த்துள்ளது என்பது இன்று தெளிவாகிது. இது குறித்து அறிஞர் பஷீர் ஹஸன் கூறுவதை கேளுங்கள்:

“சட்ட வசனங்களை புரிந்து கொள்வதில் குறுகிய பார்வையும் நடைமுறையை புரிந்து கொள்ளாத தீர்ப்புக்களும் ஷரீஆவின் இலக்குகளுக்கு இடம் கொடுக்காமல் சட்ட வசனத்தை நேரடியாக பின்பற்றியமையும் பல பிறழ்வுகளுக்கு இட்டுச் சென்றன. அதன் விளைவால் இன்று உலக முஸ்லிம் உம்மத் பெரும் அவஸ்தைப்படுகிறது.

இலங்கையின் சட்ட மன்றமும் அலட்சியப் போக்கில் பத்வாக்களை தொடர்ந்தால் முதலில் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் சிந்தனைக் சிக்களில் சீரழிவார்கள். இரண்டாவதாக பஷீர் ஹஸன்கள் சுட்டு விரலாக உருவாகுவார்கள். அப்போது சட்ட மன்றம் புனிதமானது என்று பேசி அர்த்தம் கிடையாது.

ஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே.

நடைமுறையை புரிந்து கொள்ளாத பத்வாக்கள் சமூகத்தின் ஆன்மாவை அழிக்கும்.

Web Design by The Design Lanka