முகநூலில் உலாவரும் யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மாணவிகளின் புகைப்படங்கள் » Sri Lanka Muslim

முகநூலில் உலாவரும் யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மாணவிகளின் புகைப்படங்கள்

JaffnaUniversity

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

யாழ் பல்கலையில் கற்று பட்டம் பெற்று வெளியேறிய முஸ்லீம் மாணவர்கள் மேற்கொண்ட செயற்பாடுகள் வீண் விமர்சனங்களிற்கு உள்ளாகி உள்ளது.

கடந்த ஜனவரி 10 ,11 ஆம் திகதி தொடர்ச்சியாக யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

இந்த பட்டமளிப்பு நிகழ்வில் வழமையை விட சுமார் நூற்றுக்கணக்கான முஸ்லீம் மாணவ மாணவிகள் பல்வேறு துறைகளில் பட்டங்களை பெற்று வெளியேறி இருந்தனர்.

இவ்வாறு பட்டங்களை பெற்று வெளியேறிய முஸ்லீம் மாணவ மாணவிகள் எவ்வித சிந்தனைகளும் இன்றி தாம் பெற்ற பட்டங்களை புகைப்படங்களாகவும் குறிப்பாக பெண் மாணவிகள் செல்பி எனப்படும் சுயபடம் எடுத்தலிலும் ஈடுபாடு காட்டி அதனுடன் நின்று விடாமல் முகநூல்களில் (FACE BOOK)விரைவாக தரவேற்றம் செய்வதனை அவதானிக்க முடிந்தது.

இது தவிர யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இரண்டு முஸ்லீம் மாணவ அணி பல்வேறு துறைகளில் பட்டம் பெற்று வெளியேறி சென்றுள்ளனர்.இவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் இவ்வாறான கீழ்த்தனமான வேலைகளில் ஈடுபடவில்லை.

முஸ்லீம் மஜ்லீஸின் வழிகாட்டலிலே கல்வி கற்று பட்டப்படிப்பு நிறைவடைந்த பின்னர் முன்மாதிரியாகவே குறித்த அணியினர் வெளியெறி சென்றார்கள்.

மேற்படி கூறப்பட்ட இரு மாணவ அணியினரும் பட்டமளிப்பில் செய்யாத விடயங்களை எல்லாம் இவ்வருடம்(2017) பட்டம் பெற்ற முஸ்லீம் மாணவ குறிப்பாக முஸ்லீம் மாணவிகள் மேற்கொண்டமை ஏற்க முடியாததும் மன்னிக்க முடியாததுமாகும்.

அதிலும் யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மாணவர்கள் முதலாம் வகுப்பு முதல் இறுதி ஆண்டு வரை கட்டுக் கோப்பாக வைத்திருந்த, வைத்திருக்கும் முஸ்லீம் மஜ்லீஸ் உறுப்பினர்கள் என சொல்லப்படுபவர்கள் கூட அன்னிய பெண்களுடனனும் முஸ்லீம் மாணவிகளது புகைப்படங்களையும் அனுமதியின்றி சர்வ சாதாரணமாக முகநூல்களில், பட்டம் பெற்ற புகைப்படங்களாகவும் செல்பிகளாகவும் பிரசுரித்துள்ளனர்.

இந்த படங்களை தமது சகோதரிகள் என இருந்தால் இவ்வாறு செய்ய தோன்றுமா இவர்களிற்கு …..

எந்த நோக்கத்திற்காக முகநூல்களில் இவ்வாறு தங்களதும் மற்றவர்களதும் புகைப்படங்களை சடுதியாக வெளியிட்டுள்ளார்கள் என தெரியவில்லை .ஆனால் ஏனைய சமூக மட்டத்தில் பெரும் விமர்சனங்களை அப்படங்கள் எதிர் கொண்டுள்ளதை இவர்கள் அறிவார்களா?

எனவே இம்மாணவ மாணவிகள் தாம் பட்டம் முடித்து விட்டோம் என்ற உந்துதலுடன் குறித்த படங்களை வெளியிட்டிருப்பார்கள் என்றாலும் தேவையற்ற பிரச்சினைகளை குறித்த படங்களே ஏற்படுத்தி அம்மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் என்பதை அறிய மாட்டார்களா?

அத்துடன் முகநூல்களில் தினமும் அதிகளவான பிரச்சினைகள் எழுந்த வண்ணம் உள்ளது.இவ்வாறான புகைப்படங்களை தரவேற்றம் செய்வதனால் அதிகளவான பிரச்சினைகள் எழுகின்றது.
அந்நிய சமூகத்தவர்கள் கூட முகநூல்களில் ஐ லவ் யூ கல்யாணம் பேச வரவா என கேட்கிறார்கள் இது தேவையா சகோதரர்களே?

இனிவரும் காலங்களில் யாழ் பல்கலைக்கழககத்திற்கு வரும் முஸ்லிம் மாணவர்களும் முன்மாதிரியாக பார்த்து செயற்பட வேண்டிய வேளையில் நீங்கள் சயநலமாக நடக்கலாமா?
இதற்கு சில மாணவர்களின் பெற்றோர்களும் உடந்தையாக உள்ளமை மிக வேதனைக்குரிய விடயமாகும்.

சிந்தித்து பாருங்கள் பல்கலைக்கழகத்திற்கு ஆரம்பத்தில் வந்த போது ஆரம்பத்தில் உங்களிற்கு இருந்த பயங்களை நீக்கி அரவணைத்தவர்கள், முன்னர் உங்களிற்கு முன் பல்கலைக்கழகத்திற்கு வந்த இரு முஸ்லீம் மாணவ அணியினரே.

அவர்கள் செய்யாத குறித்த விடயங்களை எல்லாம் செய்து இன்று தலைகுனிந்து நிற்கின்றீர்களே?

எனவே தான் தற்போது முகநூற்களில் புகைப்படங்களை பிரசுரித்துள்ள மாணவ மாணவிகள் தேவையற்ற படங்களை நீக்கி உங்களிற்கு முன்னர் வெளியேறிய இரு பல்கலைக்கழக அணியினர் எவ்வாறு நடந்து கொண்டனரோ அது போன்று செயற்பட்டு சமூகத்தின் பாதுகாப்பையும் அல்லாஹ்வின் அருளையும் பெற்று கொள்வோமாக ஆமீன்


குறிப்பு

இவ் ஆக்கத்தில் இணைக்கப்பட்ட புகைப்படங்கள், தங்களது எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என பல மாணவர்கள் எம்மை தொடர்பு கொண்டமையினால் பதிவேற்றப்பட்ட 09 புகைப்படங்களையும் நீக்குகின்றோம். இப்பதிவு இடப்பட்டமைக்கான நோக்கம் யாருடைய மனதை நோகடிப்பதல்ல. மாறாக முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய வரையறைகளை பேண வேண்டும் என்பதற்காகவே…!!!

Web Design by The Design Lanka