முகம்மது நபிக்கு அபகீர்த்தி- நடவடிக்கை எடுக்க முறைப்பாடு: இல்லாவிடின் போராட்டம்..! - Sri Lanka Muslim

முகம்மது நபிக்கு அபகீர்த்தி- நடவடிக்கை எடுக்க முறைப்பாடு: இல்லாவிடின் போராட்டம்..!

Contributors

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)

உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதுவரும் முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ள காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என அம்பாறை மாவட்ட பொது அமைப்புக்களின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இன்று (30) சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து இவ்வேண்டுகோளை முன்வைத்தனர். இதன் போது கருத்து தெரிவித்த அவர்கள்

உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதுவரும் முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் என்பவர் பகிர்ந்துள்ளார்.

அண்மைக்காலமாக இவர் இனங்களுக்கிடையே குழுப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் பரவலாக மேற்கொண்டுள்ளதை காண முடிகின்றது.இவ்வாறு தான் உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதரான எமது முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி பதியவிட்டுள்ளனர்.இதனால் எமது நாட்டின் சமாதானம் சீரழிவும் மிகப்பெரிய இனக்கலவரம் உருவாகவும் வாய்ப்பிருக்கிறது. எனவே இவரை கைது செய்து நாட்டின் இறையாண்மையை பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம் .

சிங்கள தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாக செறிந்து வாழும் இந்தநாட்டில் இனக்கலவரம் ஒன்றை உருவாக்க எத்தனித்திருக்கும் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் என்பவரை நாட்டை சீரழிக்க முனைந்த குற்றத்திற்காக கைது செய்து இலங்கை குடியரசின் சட்டத்தின் படி உயர்ந்த தண்டனையை பெற்றுக்கொடுக்க பொலிஸாரும், அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மேலும் இன்று மாலை குறித்த முக நூல் பதிவு தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா , சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவை தலைவர் எம்.எச்.எம். இப்ராஹிம் ,கல்முனை நல்லிணக்க அமைப்பின் தலைவர் ஏ.சி.எம். கலீலுர் ரஹ்மான் ,உள்ளிட்ட அம்பாறை மாவட்ட பொது அமைப்புக்களின் தலைவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team