முசாபர்நகரில் வெடித்த கலவரத்தின் போது பல முஸ்லிம் பெண்கள் பாலியல் பலாத்காரம்- அதிர்ச்சித் தகவல் - Sri Lanka Muslim

முசாபர்நகரில் வெடித்த கலவரத்தின் போது பல முஸ்லிம் பெண்கள் பாலியல் பலாத்காரம்– அதிர்ச்சித் தகவல்

Contributors

images

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் சமீபத்தில் வெடித்த பெரும் கலவரத்தின்போது பல முஸ்லிம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் நிருபர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன் இந்தத் தகவலை வெளியிட்டார். மேலும் இந்தக் கலவரம் அரசியல் உள்நோக்கத்துடன் தூண்டி விடப்பட்டதாகவும், தேர்தலை மனதில் கொண்டு இந்தக் கலவரம் ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

லோக்சபா தேர்தலில் தங்களது எதிர்த் தரப்புக்கு வாக்குகள் கிடைத்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் சிலர் இந்த கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம். அவர்கள் முஸ்லிம் பெண்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருப்பது இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.

பாலியல் பலாத்காரக் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட 5 பெண்களின் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து ஆண்கள் தங்களது பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீர் மல்க விவரித்துள்ளனர்.

30 வயதான இன்னொரு நபர் கூறுகையில், எனது மனைவியை 6 ஜாட் இனத்தவர்கள் சேர்ந்து ஒரு காட்டுக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம் செய்தனர். நாங்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அங்கிருந்த டாக்டர்கள், பலாத்காரம் என்று நாங்கள் பொய் சொல்வதாக கூறி மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team