முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆளுநர் அழைப்பு! - Sri Lanka Muslim

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆளுநர் அழைப்பு!

Contributors

வடக்கு மாகாண சபையின் எதிரகால செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் பிணக்குகள் தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு நேற்று முன்தினம் மாலை கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ள நிலையினில் அதற்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப்பேச்சுக்களை நடத்த முதலமைச்சர் முற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு வடக்கு மாகாண சபையின் அதிகாரிகள் பல்வேறு தடைகளைப் பிரயோகிப்பதாகவும் வடமாகாண ஆளுநரை மாற்ற வேண்டும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளதுடன் ஆளுநரை மாற்றக்கோரும் பிரேரணையொன்றினையும் அவர் சபையினில் நிறைவேற்றியிருந்தார்.

வடமாகாணசபையினை சுமுகமாக முன்னெடுக்க முடியாத நிலை தொடருமானால் தற்போதைய நிலையினில் தனது பதவியினை ராஜினாமா செய்வதே பொருத்தமானதென அவர் தனது சகாக்களிடம் கூறியுள்ளார்.

அவ்வாறான நிலையை விரும்பியிராத மஹிந்த அரசும் இந்தியாவும் பதவியினில் தொடர அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.எனினும் தற்போதைய நிலை தொடர்பினில் முதலமைச்சருடன் பேச ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  விருப்பம் கொண்டுள்ள நிலையினில் ஆளுநரது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.(j.n)

Web Design by Srilanka Muslims Web Team