முதலாம் திகதி நாடு திறக்கப்படுமா..? - Sri Lanka Muslim
Contributors

கடுமையான பயணக் கட்டுப்பாட்டுக்குள் எதிர்வரும் முதலாம் திகதி நாடு திறக்கப்படலாம் என ராகம மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார்.

நீண்ட நாட்களாக நாடு முடக்கப்பட்டுள்ளதால் நல்ல பிரதிபலன் கிடைத்துள்ளமை தெரிய வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு திறக்கப்பட்டாலும் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான பணிகளுக்கு ஊழியர்களை வரவழைப்பதில் 25% வரையறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் பொதுப் போக்குவரத்தின் போது 50% மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் குறித்த கட்டுப்பாடு தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமணங்கள் மற்றும் விருந்துபசாரங்களை முன்னெடுக்க அனுமதிக்க முடியாது என்றும், கொரோனா தடுப்பூசி செயற்றிட்டம் நூற்றுக்கு 70-80 சதவீதத்தை அடைந்தவுடன் மட்டுமே நாட்டை முழுமையாகத் திறக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முடக்கப்பட்டுள்ள காலத்தில் கொரோனா தொற்றால் மரணித்தோர் மற்றும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை திருப்திகரமாகக் குறைந்துவிட்டது என்றும் அது நல்ல நிலைமையைக் காட்டுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

Web Design by Srilanka Muslims Web Team