முதலாவது டெஸ்ட் இன்று; சச்சினை கௌரவிக்கவும் ஏற்பாடு - Sri Lanka Muslim

முதலாவது டெஸ்ட் இன்று; சச்சினை கௌரவிக்கவும் ஏற்பாடு

Contributors

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்காரின் 199வது டெஸ்ட் போட்டியென்பதால் இரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

அத்துடன் சச்சினுக்கு வரவேற்பளிக்கும் வகையில் இந்தப் போட்டியில் 199பலூன்கள் பறக்கவிடப்படுவதோடு, 199 ரோஜாப் பூக்கள் விமானம் மூலம் தூவுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று மைதானத்திற்கு வருகைத் தரும்70 ஆயிரம் ரசிர்களுக்கும் விழா மலருடன் சச்சினின் முகமூடியை வழங்குவதற்கும்  திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டியில் நான்காவது வீரராக களமிறங்கவுள்ள சச்சின், தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தி தனது 52வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை இடம்பெற்ற 88 டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி 30 போட்டிகளிலும் இந்தியா 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team