முதலாவது ஹாஜிகளை ஏற்றிய விமானம் இன்று மக்கா பயணம். - Sri Lanka Muslim

முதலாவது ஹாஜிகளை ஏற்றிய விமானம் இன்று மக்கா பயணம்.

Contributors
author image

A.S.M. Javid

இவ்வருட புனித ஹஜ் கடமைக்கான ஹாஜிகளை ஏற்றிய சவ்தியா மற்றும் சிறிலங்கன் எயார் லைன்ஸ் ஆகிய இரு  விமானங்கள் மூலம் முதலாவது தொகுதி ஹாஜிகள் இன்று (07) பண்டார நாயகக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மக்கா ஜித்தா விமான நிலையத்தை நோக்கி பயணமாகியது.

 

ஹாஜிகளை வழியனுப்பி வைக்கும் உத்தியோக பூர்வு வைபவம் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் இன்று காலை விமான நிலையத்தில் இடம் பெற்றது. மேற்படி  நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் மற்றும்  அதிகாரிகள், ஹஜ் முகவர்கள், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

இன்று முதல் இம்மாதம் 29ஆம் திகதி வரை இலங்கைக் ஹாஜிகளை ஏற்றிய விமானங்கள் புனித மக்கா நோக்கி பயணிக்கவுள்ளது. இம்முறை இலங்கையில் இருந்து 2240 பேர் ஹஜ் கடமைக்கு செல்லவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

27

 

28

 

29

 

30

 

31

Web Design by Srilanka Muslims Web Team