முதலாவது ஹாஜிகளை ஏற்றிய விமானம் பயணம். - Sri Lanka Muslim

முதலாவது ஹாஜிகளை ஏற்றிய விமானம் பயணம்.

Contributors
author image

A.S.M. Javid

இவ்வருட புனித ஹஜ் கடமைக்கான ஹாஜிகளை ஏற்றிய சவ்தியா விமானத்தின் மூலம் முதலாவது விமானம் இன்று பண்டார நாயகக்க விமான நிலையத்தில் இருந்து மக்கா ஜித்தா விமான நிலையத்தை நோக்கி இன்று (07) காலை 11.45 மணிக்கு பயணமாகவுள்ளது.

 

ஹாஜிகளை வழியனுப்பி வைக்கும் உத்தியோக பூர்வு வைபவம் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் நாளை காலை விமான நிலையத்தில் இடம் பெறவுள்ளது. மேற்படி  நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், ஹஜ் முகவர்கள், இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவராலய அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இன்று முதல் இம்மாதம் 29ஆம் திகதி வரை இலங்கைக் ஹாஜிகளை ஏற்றிய விமானங்கள் புனித மக்கா நோக்கி பயணிக்கவுள்ளது. இம்முறை இலங்கையில் இருந்து 2240 பேர் ஹஜ் கடமைக்கு செல்லவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

01

 

02

 

03

Web Design by Srilanka Muslims Web Team