முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த பதும் நிசங்க, குவியும் பாராட்டுக்கள்..! - Sri Lanka Muslim

முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த பதும் நிசங்க, குவியும் பாராட்டுக்கள்..!

Contributors

தனது முதலாவது டெஸ்டில்சதமடித்து சாதனைபட்டியலில் இணைந்து கொண்டுள்ள இலங்கைஅணியின் இளம்துடுப்பாட்ட வீரர் பதும்நிசங்கவிற்கு பல முன்னாள் வீரர்கள் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று வருடங்களாக உள்ளுர் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடிய( சராசரி 67)  பதும் நிசங்கவிற்கு இறுதியாக வாய்ப்பு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ள மகேல ஜெயவர்த்தன அவருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தான் அணியின் கம்ரன் அக்மலும் பதும் நிசங்கவை பாராட்டியுள்ளார். முதலாவது டெஸ்டிலேயே சதம் என்ன திறமை என அவர்  டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பதும் நிசங்கவை பாராட்டியுள்ள டொம் மூடி டெஸ்டின்நான்காவது நாளான நேற்று நிரோசன் திக்வெலவும் பதும் நிசங்கவும் விளையாடிய விதத்தையும் பாராட்டியுள்ளதுடன்,  இவர்கள் இருவரும் இலங்கை அணி வெற்றிக்காக முயல்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளனர்  என தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் சதமடிப்பது எப்போதும் சிறப்பான விடயம் என குறிப்பிட்டுள்ள பர்வேஸ் மஹ்ரூவ் முதல்டெஸ்டிலேயே சதமடிப்பது மிகவும் சிறப்பான விடயம் என தெரிவித்துள்ளார்.

மிகவும் பணிவான நபரின் மிகச்சிறப்பான திறமை எனவும் மஹ்ரூவ் குறிப்பிட்டுள்ளார்.

ரசல்  ஆர்னோல்ட்டும் பத்தும் நிசங்கவை பாராட்டியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team