‘முதுகெலும்புள்ளவர்களை’ பொதுபல சேனா பாராளுமன்றத்திற்கு அனுப்ப போகிறதாம் - Sri Lanka Muslim

‘முதுகெலும்புள்ளவர்களை’ பொதுபல சேனா பாராளுமன்றத்திற்கு அனுப்ப போகிறதாம்

Contributors

-எம்.அம்றித்-

பாராளுமன்றத்தில் இருக்கும் போதைப் பொருள் விற்பனையாளர்களை அங்கிருந்து விரட்டும் போராட்டம் ஆரம்பிக்கப்படும். பாராளுமன்றத்தில் இருக்கும் போதைப் பொருள் விற்பனையாளர்கள், பாதாள உலக குழுவினர்,

சண்டியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, முதுகெலும்புள்ளவர்களை பொதுபல சேனாவில் இருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்களவர்களின் உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் மீண்டும் ஒரு முறை போராடவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்புக்கு ஹெரோயின் போதைப் பொருளை வவரழைப்பவர்களின் பெயர்களும் அவர்களின் ஊர் விபரங்களும் தனக்கு தெரியும் எனவும் அது பற்றி அவசியமான இடங்களில் அறிவித்துள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அவர்களின் பெயர்களை ஊடகங்களில் வெளியிடுவது நாகரீகமான செயல் அல்ல. தற்பொழுது கைது செய்யப்படும் நபர்கள் தான் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பிரதிபலனே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசத்துரோகத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்  உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் .(lm)

Web Design by Srilanka Muslims Web Team