முன்னாள் அமைச்சர் ஏ. ஆர். மன்சூர் காலமானார் » Sri Lanka Muslim

முன்னாள் அமைச்சர் ஏ. ஆர். மன்சூர் காலமானார்

mansoor

Contributors
author image

M.S.M.ஸாகிர்

முன்னாள் அமைச்சர் அப்துல் ரஸ்ஸாக் மன்சூர் கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று(25) செவ்வாய்க்கிழமை சற்றுமுன்னர் காலமானார்.
வணிக மற்றும் கப்பல்துறை முன்னாள் அமைச்சரான அவர், குவைத் நாட்டுக்கான இலங்கைத் தூதவராகவும் பணிபுரிந்துள்ளார்.

கல்முனை மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக அயராது பதினேழு வருடங்கள் உழைத்த, நேர்மையான ஒழுக்கமான அரசியல் தலைமையாக
ஏ. ஆர். மன்சூர் விளங்கினார்.

இவர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்பு செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூரின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜனாஸா கொழும்பு திம்பிரிக்கஸ்யாயவில் வைக்கப்பட்டுள்ளதோடு, இன்று (25) செவ்வாய்க்கிழமை மாலை அவரது சொந்த ஊரான கல்முனைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
அன்னாருக்கு வல்ல அல்லாஹ் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தைக் கொடுப்பானாக! ஆமீன்!!!

Web Design by The Design Lanka