முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவத் அவர்களின் சகோதரரின் முன்மாதிரியான செயற்பாடு! - Sri Lanka Muslim

முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவத் அவர்களின் சகோதரரின் முன்மாதிரியான செயற்பாடு!

Contributors

முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் அவர்களின் சகோதரர் நஸீர் சேகுதாவுத், தனது வயல் நிலத்தில் உற்பத்தியான நெல் அறுவடையினை, எழைக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக முன்மாதிரியான செயற்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார். ஏறாவூர் புதிய கட்டுப்பள்ளிவீதியில் வசிக்கும் நஸீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளதாவது,
“உற்பத்தி பொருளான நெல்லை, இம்முறை எந்த மில் முதலாளிகளுக்கோ அல்லது நெல் வியாபாரிகளுக்கோ விற்பனை செய்ய விரும்பவில்லை. அரசின் அரிசிக்கான நிர்ணய விலையால், முதலாளிகள் பதுக்கல் முறையை கையாண்டு மிகை இலாபம் அடைய, செயற்கையான அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்ச்சிப்பதால், நேரடியாக நுகர்வோருக்கு வழங்க தீர்மானித்துள்ளேன்.
அதனடிப்படையில் கிட்டத்தட்ட 10000 ரூபாவுக்கு கொள்முதல் செய்யப்படும் ஒரு மூட்டை நெல்லை, 6000 ரூபாவுக்கு சமுர்த்தி அட்டை வைத்திருப்பவர்களுக்கு தலா ஒரு அட் டைக்கு மூன்று மூடைகள் என்ற அடிப்படையில் வழங்க தீர்மானித்துள்ளேன்.
குறிப்பு.
முதலாளிகளின் பினாமிகளாக சமுர்தி அட்டைகளுடன் வருபவர்கள் ஏற்று கொள்ளபடமாட்டார்கள். எதிர்வரும் 25 ஆம் திகதி கரடியானாறு பாம் அருகில் கொள்முதல் செய்துகொள்ளலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team