முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எந்த நேரமும் கைது செய்யப்படலாம்..! » Sri Lanka Muslim

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எந்த நேரமும் கைது செய்யப்படலாம்..!

FB_IMG_1602594358111

Contributors
author image

Editorial Team

முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

பிடியாணையின்றி றிசாத் பதியுதீனை கைது செய்யலாம் என கொழும்பு பிரதான நீதவான் இன்று அறிவித்துள்ளார்.

இதனையடுத்தே முன்னாள் அமைச்சரை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை வாக்களிப்பதற்காக பஸ்ஸில் ஏற்றிச் சென்றதிற்கமைய தேர்தல் சட்டத்தினை மீறியமை மற்றும் பொது நிதியினை முறைகேடாக பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka