முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா 15 வருட கால இரகசியத்தை வெளிப்படுத்தினார் - மஹிந்தவுக்கு மங்கள எழுதிய கடிதம்..! - Sri Lanka Muslim

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா 15 வருட கால இரகசியத்தை வெளிப்படுத்தினார் – மஹிந்தவுக்கு மங்கள எழுதிய கடிதம்..!

Contributors

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா 15 வருட கால இரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2005 இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட போது அமைச்சர் மங்கள சமரவீர தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அது தொடர்பான இரகசியம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் வெளிப்படுத் தப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து என்னை(மங்களவை) நீக்குவதற்காக நடத்தப்பட்ட கட்சி நிர்வாக சபைக் கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்று தெரிவிக்கும் வகையில் மங்கள கடிதம் அனுப்பியதாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

கடிதத்தின் முழு விபரம் கீழே

எனது பழைய ஆவணங்களில் நான் கண்ட கடிதம் ஒன்று –
இது எனது 61 ஆவது பிறந்த நாளில் மிகவும் கௌரவ குறைச்சலான முறையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்காக இடம்பெறும் கட்சி நிர்வாக சபைகள் மற்றும் கட்சிக்காக நடத்தப்படும் மத்திய குழுக் கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என அறிவிக்கும் வகையில் மங்கள சமரவீர மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

கட்சித் தலைவர் பதவியைக் கௌரவத்துடன் விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக நான் தெரிவித்திருந்தேன். எனது பிறந்த நாளில் என்னைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்க அவருக்குத் தேவையிருந்தது. எனினும் அதனை எதிர்க்கும் அதிகாரம் துணிச்சல் அனுர, மங்கள மற்றும் ஜெயராஜ் போன்ற மிகச் சிலருக்கு மட்டுமே இருந்தது.

மங்களவுக்கு மனசாட்சிப்படி அவர் உடன்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டாலும், மஹிந்தவின் தலைமையை எதிர்க்க மாட்டேன் என்று பல சந்தர்ப்பங்களில் வாய் மொழியாகவும் எழுத்து மூலமாகவும் தெரிவித்திருந்தார்.

அவர் தனது சொந்தக் கையெழுத்தில் இரகசியத் தன்மை யை பராமரிக்க இந்தக் கடிதத்தை எழுதினார். சரியாக பத்து மாதங்கள் கழித்த பின்னர் அவர் எந்தக் காரணமும் இல்லாமல் அமைச்சிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் மங்கள தனது கொள்கையைக் கைவிடவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team