முன்னாள் முதல்வர் லாலுவுக்கு 7 ஆண்டுகள் சிறை » Sri Lanka Muslim

முன்னாள் முதல்வர் லாலுவுக்கு 7 ஆண்டுகள் சிறை

xlalu-prasad4545-1521872194.jpg.pagespeed.ic.m9NZJWZEBu

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

பீகார் மாநிலத்தில் கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான மற்றொரு வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், முன்னாள் முதல்வர் லாலுவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தனர்.

ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ். பீகார் முதல்வராக இருந்த இவர் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 15 ஆண்டும் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி பணத்தை முறைகேடாக எடுத்தது தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், லாலுபிரசாத் யாதவ் குற்றவாளி என்று கடந்த 19-ம் தேதி நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும் 13 பேர் குற்றவாளிகள் என்றும் அறிவித்தார். முன்னாள் முதல்-மந்திரி ஜெகந்நாத் மிஸ்ரா உள்பட 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. லாலுவுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல் மற்றவர்களுக்கான தண்டனை விவரமும் வெளியிடப்பட்டது.

மொத்தம் மாட்டு தீவன ஊழல் தொடர்பான 5 வழக்குகளில் ஏற்கெனவே 3 வழக்குகளில் 13.5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 4-ஆவது வழக்கில் 7ஆண்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது லாலுவுக்கு கிடைத்த பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

வழக்கின் பின்னணி: ஒருங்கிணைந்த பிகார் மாநிலத்தில் கடந்த 1990ஆம் ஆண்டுகளில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்தபோது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இத்திட்டத்தின் பெயரில் அரசுக் கருவூலத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாக சிபிஐ வழக்குகளைப் பதிவு செய்தது. அந்த வழக்குகளில் பிகாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத், அம்மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்குகள் பிகாரில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலமான ஜார்க்கண்டின் தலைநகர் ராஞ்சியில் அமைந்துள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன.

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான முதலாவது வழக்கில் லாலு குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013, செப்டம்பர் 30இல் தீர்ப்பளித்தது. சைபாசா நகர அரசுக் கருவூலத்தில் இருந்து ரூ . 37.7 கோடியை சட்டவிரோதமாக எடுத்தது தொடர்பான அந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து லாலு மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த ஊழல் தொடர்பான இரண்டாவது வழக்கு தேவ்கர் அரசுக் கருவூலத்தில் இருந்து முறைகேடான வழிகளில் ரூ.89.27 லட்சம் எடுக்கப்பட்டது தொடர்பானதாகும். இவ்வழக்கில் லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 23இல் தீர்ப்பளித்தது.

இந்த முறைகேடு தொடர்பான மூன்றாவது வழக்கில் லாலுவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அதே நீதிமன்றம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இது சைபாஸா கருவூலம் தொடர்பான மற்றொரு வழக்காகும். அக்கருவூலத்தில் இருந்து ரூ.37.62 கோடியை முறைகேடாக எடுத்ததே இவ்வழக்கின் குற்றச்சாட்டாகும்.

Web Design by The Design Lanka