முன்னிலை பெற்றது வங்கதேசம் » Sri Lanka Muslim

முன்னிலை பெற்றது வங்கதேசம்

Contributors

மிர்பூர் : நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி 2வது இன்னிங்சில் ரன் குவித்து முன்னிலை பெற்றது. அந்த அணியின் மோமினுல் ஹக் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் 282 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து 3ம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 419 ரன் எடுத்திருந்தது.

நேற்று நடந்த 4வது நாள் ஆட்டத்தில் அந்த அணி 437 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கோரி ஆண்டர்சன் 116, வில்லியம்சன் 62, டெய்லர் 53, சோதி 58 ரன் எடுத்தனர். வங்கதேச பந்துவீச்சில் ஷாகிப் அல் ஹசன் 5, ரசாக் 2, அமின் உசேன், நசீர் உசேன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 155 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுத்துள்ளது.

அனாமுல் ஹக் 22, மார்ஷல் அயூப் 9 ரன்னில் வெளியேறினர். தமிம் இக்பால் , மோமினுல் ஹக் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 157 ரன் சேர்த்தது. தமிம் இக்பால் 70 ரன் எடுத்த்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய மோமினுல் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்தார். மோமினுல் 126 ரன் (225 பந்து, 16 பவுண்டரி), ஷாகிப் அல் ஹசன் 32 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கைவசம் 7 விக்கெட் இருக்க வங்கதேசம் 114 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

Web Design by The Design Lanka