முன்னுக்கு பின் முரணான கருத்து தெரிவிக்கின்றாரா மரணித்த பெண்ணின் தாய்..! மக்கள் காங்கிரஸ் தலைவரை தூய்மைப்படுத்தும் தாயின் வாக்குமூலம். - Sri Lanka Muslim

முன்னுக்கு பின் முரணான கருத்து தெரிவிக்கின்றாரா மரணித்த பெண்ணின் தாய்..! மக்கள் காங்கிரஸ் தலைவரை தூய்மைப்படுத்தும் தாயின் வாக்குமூலம்.

Contributors

அங்கு வேலை செய்யும் ஒருவருக்கு கோள் பண்ணியே எனது மகளோடு பேசுவேன். வீட்டுள்ளவர்களின் தொலைபேசி இலக்கம் என்னிடம் இருக்கவில்லை.

நான் மேடத்திடம் எனது மகளை அழைத்துச் செல்ல 21ம் திகதி வருவதாக சொன்னேன். அவர்களும் “ஆ” என கூறினார்கள்.

1. இவ்விரண்டு பேச்சும் முன்னுக்கு பின் முரண்படுகிறதல்லவா? அங்குள்ளவர்களின் தொலைபேசி இலக்கம் தெரியாமல் எப்படி பேச முடியும்?

2. அவர்களும் குறித்த பெண்ணை கூட்டிச் செல்ல எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லையே?

3. குறித்த தினம் வந்து, அழைத்து சென்றிருந்தால், அந்த பெண் இங்கு தற்கொலை செய்திருக்க மாட்டாரே?

எனது மகள் ஒருநாள் விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். மருந்து எடுக்க சொன்னேன். மருந்து எடுத்ததாகவும் கூறினார்.

1. இவ்விடயத்தை குறித்த தாய், தனது மகளுக்கு நடந்த கொடுமை போன்று சொல்ல முனைவதாக கருதுகிறேன்.

2. வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு விரலில் காயம் ஏற்படுவதை சாதாரணமாகவும் நோக்கலாமல்லவா?

3. அந்த பெண்ணின் காயத்துக்கு மருந்து எடுத்து கொடுத்துள்ளார்கள் தானே. அப்படியானால் நன்றாக தானே கவனத்துள்ளார்கள். இதில் என்ன குற்றமுண்டு? சீழ் பிடிக்க விடவில்லையே?

கடந்த மாதம் எனது மகளோடு பேசும் போது, வீட்டு சொந்தக்காரர்கள் வழங்கிய 5000 ரூபாயை வேலை செய்யும் ஒருவர் களவு எடுத்துவிட்டதாக கூறினார்

1. குறித்த பெண்ணிற்கு 5000 வீதம் சம்பளத்துக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது. நன்றாக தானே கவனித்துள்ளார்கள்?

2. அவர்கள் வழங்கிய பணத்தை அவர்களே திருடுவார்களா..? அதுவும் 5000 திருடும் நிலையில் அ.இ.ம.கா தலைவர் றிஷாத்தின் குடும்பம் உள்ளதென்றால் யாராவாது நம்புவார்களா?

3. இது அந்த பெண்ணுக்கு ஏதோ ஒரு பிரச்சினை உள்ளதை தெளிவாக்குகின்றதல்லவா?

4. அங்கு வேலை செய்பவர் என்று தெளிவாக கூறுகிறார். அவரின் கூற்றின் அடிப்படையில்  நோக்கினால், அவர் அ.இ.ம.கா தலைவரின் குடும்பம் அல்லாத ஒருவர் என்பதை துல்லியமாக்கிறது. யார் அவர்?

அங்கு வேலை செய்பவர் தும்புத்தடியால் அடித்ததாக தனது மகள் கூறினார்

1. அ.இ.ம.கா தலைவரின் குடும்பத்தினர் யாராவது இதனை செய்திருந்தால், நிச்சயம் அந்த பெண் இவர் தான் அடித்தார் என கூறியிருப்பார். நிச்சயம் அது வேறு யாரோ ஒருவாராக இருக்க வேண்டும்.

2. தனக்கு தும்புத்தடியால் அடித்தார் என, தனது மகள் கூறினால், யார் அடித்தார் என தாய் கேட்காமலா இருப்பார். அவளை தெளிவாக அடையாளப்படுத்த தாய் தயங்குவதேன்.

3. அங்கு வேலை செய்பவர் என்று தெளிவாக கூறுகிறார். அவரின் கூற்றின் அடிப்படையில்  நோக்கினால், அவர் அ.இ.ம.கா தலைவரின் குடும்பம் அல்லாத ஒருவர் என்பதை துல்லியமாக்கிறது. யார் அவர்?

இந்த தாய் எங்குமே அ.இ.ம.கா தலைவர் மீதோ அல்லது அவரது குடும்பத்தினர் மீதோ, குற்றம் சுமத்தவில்லை. ஏதோ ஒன்றை மறைக்க முற்படுகிறார். தாயின் இவ் வாக்குமூலம் அ.இ.ம.கா தலைவரை குற்றமற்றவராக கூறுவதாகவே நான் நோக்குகிறேன்.

குறிப்பு : குறித்த தாயின் வேதனையை உணர முடிகிறது. எல்லாம் வறுமையின் கொடூரம்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Web Design by Srilanka Muslims Web Team