முன்னேறிச் செல்! பொறுமையாய் தானாக வந்து சேரும் அமானிதம் » Sri Lanka Muslim

முன்னேறிச் செல்! பொறுமையாய் தானாக வந்து சேரும் அமானிதம்

su

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-மீராவோடை சுபைர்-


தம்பி!
உன் பாதை
நேரானது…!!!

உன் வரவு
சில பேருக்கு
கசப்பானது…!!!

குறுக்கு வழியில்
பயணிப்பதற்கு
தப்பான பாதையில்
வந்தவனல்ல – நீ

விமர்சனங்கள்
கண்டு
இடை நடுவில்
உன் பயணத்தை
நிறுத்திக் கொள்ளாதே…!!!

காலங்கனியும் வரை
காத்திரு – உன்
கடமையை
தொடர்ந்திரு…!!!

இலட்சியப் பயணத்தில்
இடையூறு வரத்தான்
செய்யும்
இதற்காக
அலட்சியமாய்
இருந்து விடாதே…!!!

வசை மொழிகளெல்லாம்
வாழ்த்துக்களாய்
எண்ணிக் கொள்
என்னருமைத் தம்பியே…!!!

வாசிக்கு
வாலாட்டுபவர்கள்
காசிக்கு
தாலாட்டுபவர்கள்
இவர்கள்
உன் அன்புக்கடலில்
நீச்சல் அடிக்க தெரியாதவர்கள்…!!!

இதனால்தான்
கரையொதுங்கிறார்கள்
கண்டு கொள்ளாதே…!!!

காலம் மாறும்
அது வரையும் காத்திரு
சில மாற்றங்களை
செய்து பார்
பல மாற்றங்களை
காண்பாய்…!!!

ஒட்டு மொத்த
சமூகத்தையும்
திருப்தி படுத்த
யாராலும் முடியாது…!!!

விருப்பும் வரும்
வெறுப்பும் வரும்
தூசிப்பவனும் வருவான்
நேசிப்பவனும் வருவான்
இடையில் இருந்து கொண்டு
பயணிப்பதுதான்
அரசியல்…!!!

தானும்
தன் குடும்பமும் வாழ
சில பேர்
அரசியலுக்கு வருகிறார்கள்…!!!

எதுவும் செய்ய
வக்கில்லாதவர்கள்
எம் பி யாய் இருந்து
சுக போகம் காணலாம்
என்றும் சில பேர் வருகிறார்கள்.

மக்களைப் பற்றி…
தொண்டர்களைப் பற்றி…
கட்சியின் வளர்ச்சியைப் பற்றி…
கவலை கொள்ளாதவர்கள்.

சாகாவரம் பெற்றவர்கள் போல்
ஆயுள் உள்ளவரை
எம் பி யாக வேண்டுமென்று வருகிறார்கள்.

சில பேர்
சுகமாக தூங்கியெழுந்து
விடியலில்
நான் தான் எம் பி என்று
அறிக்கை விடுகிறார்கள்…!!!

அதற்கெல்லாம்
எதிர் மாறானவன் – நீ
அதனால்தான்
கரடுமுரடான பாதையில்
பயணிக்க வேண்டியிருக்கிறது.

முன்னேறிச் செல்
பொறுமையாய்…
தானாக
வந்து சேரும்
அமானிதம்…!!!

Web Design by The Design Lanka