மும்பை அணிக்காக டெண்டுல்கர் மீண்டும் விளையாடுவாரா? - Sri Lanka Muslim

மும்பை அணிக்காக டெண்டுல்கர் மீண்டும் விளையாடுவாரா?

Contributors

டெண்டுல்கர் தனது ஓய்வு முடிவை வெளியிட்ட போது, நாங்கள் மும்பை கிரிக்கெட் சங்க தேர்தலில் ‘பிஸி’யாக இருந்தோம் என மும்பை கிரிக்கெட் சங்கத்தின் துணைத்தலைவர் ரவி சவாந்த் தெரிவித்துள்ளார்.மும்பை டெஸ்டுடன் அவர் ஓய்வு பெற்ற பிறகு அவரை அணுகி, இந்த பருவகால ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாடும்படி வலியுறுத்துவோம். ரஞ்சி போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக அவர் எங்களுக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக தெரிவிக்கவில்லை’ என்றார்.

இதற்கிடையே டெண்டுல்கருக்கு புகழாரம் சூட்டியுள்ள அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, ‘எனது தலைமுறை காலத்தில் சிறந்த துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தான்.

அவரது கடைசி டெஸ்டின் முதல் இரு நாட்களில் வர்ணனை செய்யும் வாய்ப்பு கிடைத்திருப்பது கெளரமாக இருக்கிறது’ என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team