மும்மொழிகளிலும் இரு நூல்கள் வெளியீடு - Sri Lanka Muslim

மும்மொழிகளிலும் இரு நூல்கள் வெளியீடு

Contributors
author image

பிறவ்ஸ் முஹம்மட்

லண்டனில் வசித்துவரும் எச்.முனவ்வர் எழுதிய “மண்ணிலிருந்து விண்வெளிவரை அல்குர்ஆன்” மற்றும் “சூரியன் சுருட்டப்படும்போது கடல்கள் தீமூட்டப்படும்போது: அல்குர்ஆனில் இயேசுநாதர்” போன்ற இருநூல்களும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளன.
எதிர்வரும் திங்கட்கிழமை 01ஆம் திகதி பி.ப.4.45 மணியளவில் மருதானை, மாளிகாகந்தை வீதியில் அமைந்துள்ள ஜம்மித்துஷ் ஷபாப் கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். முபாரக் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். 
ஜனாதிபதியின் இணைப்பாளர் சாஸ்திரபதி கலகம தம்மரன்ச தேரர் மற்றும் வைத்தியர் ஆகில் அஹமத் சரிப்தீன் உட்பட பலர் சிறப்புரையாற்றவுள்ளனர். இயற்கை, வானியல் மற்றும் ஜீவராசிகள் குறித்து விஞ்ஞானமும் இஸ்லாலும் கூறும் கருத்துகள் குறித்து இங்கு ஆராயப்படவுள்ளன. இதுகுறித்து பெளத்த, கத்தோலிக்க, இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் பலரும் சிறப்புரையாற்றவுள்ளனர்.
இஸ்லாம் பற்றிய புரிந்துணர்வையும், சிந்தனையையும் ஏற்படுத்தும்விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் இன, மத பேதமின்றி அனைத்து மக்களும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team