முரளிதரன் வைத்தியசாலையில் இருந்து வௌியானார்..! - Sri Lanka Muslim

முரளிதரன் வைத்தியசாலையில் இருந்து வௌியானார்..!

Contributors

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அப்போலோ வைத்தியசாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அவர் தற்போது வைத்தியசாலையில் இருந்து இருந்து வௌியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக அவர் இருந்து வருகிறார். ஹைதராபாத் அணி தற்போது சென்னையில் தங்கி கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நேற்று பயிற்சியின் போது முத்தையா முரளிதரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதுதை அடுத்து அவசரமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team