முல்லைதீவு விபத்தில் கண்டி அக்குறனை முஹம்மது ஹில்மி உயிரிழப்பு! - Sri Lanka Muslim

முல்லைதீவு விபத்தில் கண்டி அக்குறனை முஹம்மது ஹில்மி உயிரிழப்பு!

Contributors

முல்லைத்தீவு பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் கண்டி அக்குறனை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மது ஹில்மி வயது 24 என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

 

குறித்த இளைஞன் முல்லைத்தீவு நகரில் வர்த்தக கடையொன்றை நடத்திவரும் தனது நண்பருடன் முல்லைத்தீவுக்கு வருகை தந்துள்ளதுடன் அவர் முல்லைத்தீவு முள்ளியவளை பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றார்கள்.

Web Design by Srilanka Muslims Web Team