முல்லைத்தீவில் அமைச்சர் ரிசாத் பதியுதீனால் மின்சார இணைப்புக்கள் வழங்கிவைப்பு - Sri Lanka Muslim

முல்லைத்தீவில் அமைச்சர் ரிசாத் பதியுதீனால் மின்சார இணைப்புக்கள் வழங்கிவைப்பு

Contributors
author image

A.H.M.Boomudeen

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை மின்சாரம் கிடைக்காத தமிழ் குடும்பங்களுக்கு இரண்டாம் கட்ட மின்சாரம் வழங்கும் நிகழ்வு இன்று (03) புதன்கிழமை இடம்பெற்றது.

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாமுனை, பூவரசன் வெளி, குமுளமுனை ஆகிய பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கே அமைச்சர் ரிசாத் பதியுதீனின் முயற்சியினால் மின்சாரம் இணைப்புக்கள்  வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜனூபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இங்கு உரையாற்றிய அமைச்சர்-

 

இது வரை மின்சாரம் கிடைக்காத முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று கிராமங்களுக்கு இரண்டாம் கட்ட மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

எதிர்வரும் காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களுக்கும் மின்சாரம் கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றேன். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக இருப்பதனால் இவ் அபிவிருத்திகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியுமாகவுள்ளது.

 

 இங்கு பிரதேச இன வேறுபாடின்றி எமது அபிவிருத்தி திட்டங்களை நாம் முன்னெடுக்கின்றோம். இம்மாவட்ட மக்களாகிய நீங்கள் ஒன்றுபட்டு நன்றியுடன் இவ் அபிவிருத்திகளை பயன்படுத்துங்கள் என குறிப்பிட்டார்.

 

21

 

20

 

22

 

23

 

24

 

25

 

26

Web Design by Srilanka Muslims Web Team