முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச் சுவர் இடித்தழிப்பு - Sri Lanka Muslim

முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச் சுவர் இடித்தழிப்பு

Contributors

தஞ்சை, விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சை, விளார் சாலையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த 8 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து 3 நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்று, கடந்த 10ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்தது.

இந்நிலையில், இன்று காலை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை, சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் முன்னிலையில் இடிக்கும் பணி நடந்து வருகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதால் அதை இடிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி உத்தரவின் பேரில் தான் மேற்படி சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(இரண்டாம் இணைப்பு)

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் பகுதியில் உரிய அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பூங்கா இன்று அதிகாலை 5.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினரால் சட்டவிரோதமாக இடித்துத் தகர்க்கப்பட்டது.

முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரை சுற்றுச் சுவரும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெயர்ப்பலகையும் தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டது. இப்படத்தில் காணப்படும் நீரூற்று வரை வந்து விட்ட காவல்துறையினர் அதற்குள் தோழர்கள் கூடியதால் தற்காலிகமாக இடிப்பதை நிறுத்தியுள்ளனர்.

ஆனால் முற்றத்திற்குள் செல்லும் பாதையை வேலி போட்டு அடைத்துள்ளனர். அனைத்துத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைக் குறித்து முடிவெடுக்கப்படும் என பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார்.

 

13s21

Web Design by Srilanka Muslims Web Team