இதனை முழுதாக படிக்காவிட்டால் நல்லதொரு செய்தியை நீங்கள் தவறவிட்டுவிடுவீர்கள்! » Sri Lanka Muslim

இதனை முழுதாக படிக்காவிட்டால் நல்லதொரு செய்தியை நீங்கள் தவறவிட்டுவிடுவீர்கள்!

lett

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Fauzuna Binth Izzadeen
SULTANATE OF OMAN


திறக்கப்படாத கடிதம்:
((முழுதாக படிக்காவிட்டால் நல்லதொரு தகவல் தவறவிடப்படலாம்))

காலையில் படுக்கைவிட்டு தாமதித்து எழுந்த போது அவளது ஆசை கணவனின் நடமாட்டங்களை அவளால் அவதானிக்க முடியவில்லை.குளியலறை,பல்கனி என தேடிப் பார்த்தவளுக்கு மேசை மீதிருந்த கடிதம் அப்போதுதான் கண்ணில் பட்டது.பதற்றத்த்துடன் நடுங்கியபடி கையிலெடுத்தாள்,

#MY_DEAREST_SWEET_HEART….
என ஆரம்பிக்கபப்பட்டிருந்தது.மனதின் குதூகலத்திற்கு அளவே இல்லை.கடிதத்தை முத்தமிட்டாள்.பயம்,பதற்றம் எல்லாம் பறந்துவிட மறுபக்கம் திருப்பிப் பார்த்தாள்,

#YOURS_EVER_LOVING_HUBBY
#I_LOVE_U
என்ற வார்த்தைகளுடன் அவள் கணவன் கடிதத்தை நிறைவு செய்திருந்தான்.

மீண்டுமொரு உற்சாகம் அவளுள்,பேதை மனம் முழுதும் போதைக்காட்பட்டது.சிறகுகளின்றி வானில் மிதப்பதாய் உணர்ந்தாள்.

கடிதத்தை மீண்டும் முத்தமிட்டாவாறு மேசை மீது வைத்துவிட்டு ஊக்கமருந்து சாப்பிட்டவள் போல வேலை செய்யத் தொடங்கினாள்.பம்பரமாய் சுழன்றாள்.கணவனின் ஆடைகளை துவைத்தாள்.அயன் செய்து வைத்தாள்.கணவனுக்கு பிடித்தமான உணவு,டெசர்ட் என அத்தனையையும் பார்த்து பார்த்து செய்தாள்.இடைக்கிடை கடிதத்தின் ஆரம்பத்தையும் இறுதியையும் பார்த்துக் கொள்ளத் தவறவில்லை,அதிலேயே இன்பமும் அடைந்தாள்.

மாலையில் கணவனுக்கு தேநீருடன் பரிமாற அவனுக்குப் பிடித்த சிற்றுண்டியையும் தயாரித்து விட்டு கடிகாரத்தைப் பார்த்தவளுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.வழமையான நேரம் கடந்தும் கணவன் வரவில்லை.பரவாயில்லை,களைத்துப்போய் வருபவன் ஓய்வெடுக்கட்டுமென தனக்குள் கூறியவாறு படுக்கையை தயார் செய்து கொண்டிருக்கும் போது வாசலில் கணவனது நடமாட்டம் தெரிந்தது.ஓடிப் போய் கதவைத் திறந்தாள்.

அவளைப் பார்த்த கணவனுக்கோ எரிச்சலாக இருந்தது.”என்ன இது?கடிதத்தை பார்த்தாயா?”என்றான்.

“பார்த்தேனே”என்று குதூகலத்துடன் முத்தமிட நெருங்கியவளையும் சட்டை செய்யாமல் விறுவிறுவென பெட்ரூமினுள் சென்றவன் ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறினான்.அலுவலக விடயமாக வெளியூர் செல்கிறேன்.திரும்பி வர பத்து நாளாகும் என்றவன் அவளது பதிலுக்காக காத்திராமல் வாசலில் நின்ற அலுவலக வாகனத்தில் சென்றும் விட்டான்.

என்ன நடந்தது என்று புரிந்தும் புரியாமலும் நின்றவளுக்கு,”கடிதத்தை வாசித்தாயா?”என்ற கணவனின் கேள்வி மீண்டும் காதுகளில் எதிரொலிக்க பாய்ந்து சென்று கடிதத்தை வாசிக்கத் தொடங்கினாள்…

My dearest sweet heart,
இன்று அலுவலகத்தில் அதிகம் வேலைகளிருப்பதால் நேரத்துடனேயே போகிறேன்.அலுவலக வேலை விடயமாக பத்து நாட்களுக்கு வெளியூர் செல்ல ஏற்பாடாகியிருக்கிறது.உடன் உன்னையும் அழைத்துச் செல்ல திட்டமிட்டிருக்கிறேன். surprise ஆக இருக்கட்டுமென்று இதுவரை உனக்கு சொல்லாமலேயே இருந்துவிட்டேன்.மாலை 7.30 ற்கு விமான நிலையத்திலிருக்க வேண்டும்.ஏழு மணிக்கு வருவேன் உன் பொருட்களை தயார் படுத்திக் கொள்.சிரமம் கருதி என்னுடையதை தயார் படுத்தி வைத்திருக்கிறேன்.தயாராக இரு.

Yours ever loving hubby
I love u…
வாசித்தவள் அசைவற்று நின்றாள்.கண்களின் அனுமதியின்றி கண்ணீர்த் துளிகள்.கையில் கிடைத்த தகவலை சரிவர படிக்கவில்லை என கைசேதப்பட்டாள்.

என்ன ஒரு முட்டாள் பெண்??

என்ற உங்களது வசைபாடல் எனக்குக் கேட்கிறது.
உண்மைதான் துரதிஷ்டவசமாக நாங்களும் இந்த பெண்ணை போன்றவர்கள்தான்….

ஆம் நாம் முஸ்லிமாக பிறந்து விட்டோமென பெருமைப் படுகிறோம்,பெருமிதப் படுகிறோம்.அந்த ரப்பின் அடிமைகளென அகமகிழ்கிறோம்.ஆனால் மரணமடைய முன் அடியார்களாக என்ன செய்ய வேண்டுமென்று அவன் எதை எதிர்ப்பார்க்கிறான் என அறிய விரும்புவதே இல்லை-இந்தப் பெண்ணைப் போல…..

அவன் எமக்குத் தந்த கடிதத்தின் ஒரு சில வரிகளை பார்க்கிறோம்.கடிதத்தை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறோம்.வாக்குறுதிகளை கண்டு குதூகலிக்கிறோம் ,கட்டளைகளை புறந்தள்ளி விடுகிறோம்.-இந்தப் பெண்ணைப் போல…

இஸ்லாம் என்ன என்பதை புரியாமல்,இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தல் சாத்தியமில்லை.அவனது வாக்குகளிலும் வார்த்தைகளிலும் அற்புதங்கள் மறைந்திருப்பதை எம்மில் பலர் உணரவில்லை.
அவனது வார்த்தைகளை(குர்ஆனை) நோக்கி நாம் நடந்தால் நாம் எதையெல்லாம் தேடி ஓடுகிறோமோ அதுவெல்லாம் எம்மை தேடி வரும் என்பதை அறியவுமில்லை.

நாமும் எமது கையிலுள்ள அந்த கடிதத்தை முத்தமிட்டு பத்திரப்படுத்திக் கொண்டிராமல் அதனுள் இருக்கும் செய்தியை தேட முயற்சிப்போம்.
It will draw us closer HIS desire for us and enable us to walk in victory over this world and it’s challenges…

Web Design by The Design Lanka