முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் தடை நீக்கம் - Sri Lanka Muslim

முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் தடை நீக்கம்

Contributors

முகத்தை முழு மையாக மறைக் கும் வகையில் தலைக்கவசம் (ஹெல்மட்) அணிவ தற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தை பயன்படுத்தி தலைக்கவசம் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் குறைந்த வரு மானம் பெறுவோர் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பொலிஸ் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனையடுத்தே பாவனையாளர்களின் நலன் கருதி, மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவது குறித்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதிதாக நடைமுறைப்படுத்திய சட்டத்தை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் அதிகமானோர் விபத்துக்குள்ளாகி தலையில் காயம் ஏற்படுதல், முழுமையாக முகத்தை மறைத்து குற்றச் செயல்களை மேற்கொண்டு விட்டு இலகுவாக தப்பிச் செல்லல் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டே தலைக்கவசம் அணிவது தொடர்பில் 1991ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் திகதியிடப்பட்ட 644/ 2 ம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு தலைக்கவசம் அணிவது தொடர்பில் புதிய நடைமுறையை கண்டிப்பாக அமுல்படுத்த பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும் தலைக்கவசம் பயன்படுத்து வோரில் குறைந்த வருமானம் உடையோர் எதிர்கொண்ட பல்வேறு விடயங்களை கருத்திற் கொண்டே இந்த புதிய நடைமுறையை தளர்த்த தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.thinakan

Web Design by Srilanka Muslims Web Team