முஸ்லிம்களின் நிகாப் ,பர்தா போதைப்­பொருள் கடத்­தலின் தேசிய சின்­ன­மாக மாறி விட்­டது- பொது­ப­ல­சேனா - Sri Lanka Muslim

முஸ்லிம்களின் நிகாப் ,பர்தா போதைப்­பொருள் கடத்­தலின் தேசிய சின்­ன­மாக மாறி விட்­டது- பொது­ப­ல­சேனா

Contributors

போதைப்­பொருள் கடத்­தலின் தேசிய சின்­ன­மாக மாறி விட்­டது. இலங்­கையில் உட­ன­டி­யாக நிகாப் முறை­யினை தடை செய்­யா­விடின் நாட்­டிற்கே பிரச்­சி­னை­யாகும் என பொது­ப­ல­சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

 

போதை­வஸ்து வியா­பா­ரத்தின் கேந்­திர நிலை­ ய­மாக இலங்கை மாறு­கின்­ற­மைக்கு முஸ்லிம்  தீவி­ர­வா­தி­களே கார­ண­மெ­னவும் அவ் அமைப்பு குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

 

 

இது தொடர்­பாக பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கருத்து தெரி­வித்தார். இலங்­கையில் இன்று முஸ்லிம் அடை­யா­ளங்­களை வைத்தே போதைப்­பொருள் கடத்­தல்கள் இடம்­பெ­று­கின்­றது.

 

குறிப்­பாக முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா, ஹபாயா ஆடை­களை அணிந்து கொண்டே இலங்­கைக்குள் போதைப்­பொ­ருட்­களை எடுத்து வரு­கின்­றனர். மதத்­தினை கார­ண­மா­கவும் அவர்­களின் மத அடை­யா­ளங்­களை வைத்­துக்­கொண்டு சட்­ட­வி­ரோத செயல்­களில் ஈடு­ப­டு­வது தடுக்­கப்­பட வேண்டும்.

 

முஸ்­லிம்­களை சாட்டி ஏனையோர் இவ்­வாறு செயற்­ப­டு­வ­தனால் முஸ்லிம் மதத்­திற்கும் அச் சமூ­கத்­தி­ன­ருக்கும் அவப் பெயரை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அதேபோல் முஸ்லிம் தீவி­ர­வாத கொள்கை உடை­ய­வர்கள் இவ்­வாறு செயற்­ப­டு­வ­தனால் இலங்­கையில் ஏனைய மதத்­த­வர்­க­ளுடன் வாழும் முஸ்லிம் மக்­க­ளையும் தவ­றான எண்­ணத்தில் சித்­த­ிரிக்கும் நிலை காணப்­ப­டு­கின்­றது.

 

மத கொள்­கை­களை விடவும் தேசிய பாது­காப்பே முக்­கி­ய­மாகும். பெளத்­தர்கள் இந்­துக்கள் எவ்­வாறு வாழ்­கின்­ற­னரோ அதேபோல் முஸ்­லிம்­களும் வாழ வேண்டும். தீவி­ர­வா­தப்­போக்­கினை இலங்­கையில் பரப்பி இலங்­கை­யையும் மத்­திய கிழக்கு நாடு­களின் பட்­டி­யலில் இணைத்து விடக்­கூ­டாது.

 

மேலும் இலங்­கையில் இன்று அதி­க­ள­வி­லான போதைப்­பொருள் கொள்­க­லன்கள் சிக்­கு­வ­தற்கும் அர­சி­யலில் குழப்­பத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் முஸ்லிம் தீவி­ர­வா­தமே பிர­தான கார­ண­மாகும். மத்­திய கிழக்கு நாடு­க­ளுடன் உற­வு­களை வைத்­தி­ருக்கும் இலங்கை முஸ்­லிம்கள் அந் நாடு­களில் இருந்து போதைப்­பொ­ருட்­களை வாங்கி இலங்­கையில் இளை­ஞர்­களின் மத்­தியில் பரப்­பு­கின்­றனர். இன்று பாட­சாலை மாண­வர்கள் மத்­தி­யிலும் இளம் சமூ­கத்­தினர் மத்­தி­யிலும் போதைப்­பொருள் பழக்கம் அதி­க­ரித்து விட்­டது.

 

 

சர்­வ­தேச சூதாட்­டக்­கா­ரர்­க­ளிடம் இருந்து கசி­னோ­வினை தடை செய்ய முன்னர் முஸ்­லிம்­களின் நிக்காப் பர்தா ஆடை­க­ளையும் மத்­திய கிழக்கில் இருந்து வரும் முஸ்­லிம்­க­ளையும் தடை செய்ய வேண்டும். அர­சாங்­கத்தின் அதி­கா­ரத்­தினை அவ­சி­ய­மான இடத்தில் பயன்­ப­டுத்­தா­விடின் இலங்கை எதிர்­கா­லத்தில் முஸ்லிம் நாடாக மாறி­விடும்.

 

 

இலங்­கைக்­கென இருக்கும் பெளத்த இலட்­சி­னை­களை பெளத்­தர்­களே பாது­காக்க வேண்டும். விடு­த­லைப்­பு­லி­க­ளி­ட­மி­ருந்து நாட்டைக் காப்பாற்றியது போல் முஸ்லிம் தீவிரவாதிகளிடமிருந்தும் இலங்கையை காப்பாற்ற வேண்டும். ஆயுதம் ஏந்தி போராடுவதை விடவும் மோசமானதே மத வாதம். மத மாற்றத்தினூடாக இலங்கையினை முஸ்லிம் நாடாக மாற்றுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.-வீரகேசரி

Web Design by Srilanka Muslims Web Team