முஸ்லிம்களின் மத உரிமைகளை ஈவிரக்கமின்றி ஏமாற்றும் பிரதமரும் அரசும்..! » Sri Lanka Muslim

முஸ்லிம்களின் மத உரிமைகளை ஈவிரக்கமின்றி ஏமாற்றும் பிரதமரும் அரசும்..!

Contributors
author image

Editorial Team

இலங்கையில் கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என்ற பிரமர் மகிந்த ராஜபக்சவின் கடந்த வார அறிவிப்பு முஸ்லீம்களிற்கு தங்கள் மத உரிமைய ஈவிரக்கமின்றி மறுத்த கொள்கையை முடிவிற்கு கொண்டுவருவது போல தோன்றியது.

இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி உடல்களை தகனம் செய்வது பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் என அரசாங்கம் எந்தவித மருத்துவரீதியிலான ஆதாரஙகள் இன்றி தீர்மானித்திருந்தது.

ஆனால் பிரதமரின் அந்த வாக்குறுதியையும் மீறி, அரசாங்கம் கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தொடர்ந்தும் தகனம் செய்துவருகின்றது. மேலும் உடல்களை தகனம் செய்யும் கொள்கையை நிபுணர்கள் குழு மாத்திரமே மாற்றமுடியும் எனவும் அரசாங்கம் பின்வாங்குகின்றது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச தடையைநீக்குவதாக அறிவித்த மறுநாள் முகமட் கமால்தீன் முகமட் சமீமின் உடல் ஆனைமடுவில் தகனம் செய்யப்பட்டது. பின்னர் அவசரஅவசரமாக கொரோனாவைரஸ்; என தெரிவித்து உடலை தகனம் செய்துவிட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மார்ச் 2020முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் உடல்களை தகனம் செய்யும் கொள்கை முஸ்லீம் மக்களுக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தவர்கள் நோயறிதல் குறித்து கேள்வி எழுப்பி மேலதிக சோதனைகள் இடம்பெறவேண்டும் என வேண்டுகோள் விடுத்த பல தருணங்களிலும் அதிகாரிகள் அதனை புறக்கணித்து உடல்களை தகனம் செய்துள்ளனர்.

உடல்களை தகனம் செய்யுமாறு வேண்டுகோள் விடுப்பதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மருத்துவநிபுணர்கள் குழு இந்த கொள்கைக்குமுடிவை காணுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கியநாடுகள் நிபுணர்கள் குழு இந்த கொள்கையை கண்டித்துள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இதனை கண்டித்துள்ளது. இலங்கை பிரதமரின் அறிவிப்பை வரவேற்றவர்களில் ஒருவர் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர் 22 ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்புநாடான பாக்கிஸ்தானின் ஆதரவை எதிர்பார்க்கின்றது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையில் அதிகரித்துவரும் கரிசனைகளுக்கு மத்தியில் புதிய தீர்மானமொன்றை முன்வைக்கவுள்ளது.

கட்டாயதகனம் குறித்த முஸ்லீம்களின் இதயபூர்வமான கவலைகளை நிவர்த்தி செய்வது குறித்து அரசாங்கம் பச்சாதாபத்தை வெளிப்படுத்தாதது ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கான மேலதிக ஆதாரமாக காணப்படுகின்றது

Web Design by The Design Lanka