முஸ்லிம்களுக்கு உதவ சிரியாவிற்கு சென்ற சகோதரிகள் - Sri Lanka Muslim

முஸ்லிம்களுக்கு உதவ சிரியாவிற்கு சென்ற சகோதரிகள்

Contributors

மோதலில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு உதவ சிரியாவிற்கு செல்வதாக பெற்றோருக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்துவிட்டு மாயமான நோர்வே  சகோதரிகள் இருவரை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி யுவதிகள் இருவரும் 16 மற்றும் 19 வயதானவர்கள் . அவர்கள் தற்போது சிரியாவிற்கு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதற்கென இண்டர்போலின் உதவி நாடப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இருவரும் இறுதியாக துருக்கியின் எல்லைப் பகுதியில் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களால் முடிந்தவரையில் முஸ்லிம்களுக்கு உதவப்போவதாகக் கூறி இருவரும் அவரது பெற்றோருக்கு மின்னஞ்சலொன்றை அனுப்பியுள்ளனர்.

முஸ்லிம்கள் தற்போது எல்லா முனையில் இருந்தும் தாக்கப்படுகின்றனர் அதற்கு எதாவது செய்யப்படவேண்டும், நாம் முஸ்லிம்களுக்கு உதவவேண்டும் இதனை செய்வதற்கான ஒரே வழி சந்தோசத்தின் போதும் வலியின் போதும் அவர்களுடன் இருப்பது என சகோதரிகள் இருவரும் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.-TC

Web Design by Srilanka Muslims Web Team