முஸ்லிம்களுக்கு எதிரான விஷமப் பிரச்சாரங்களை தடுத்து நிறுத்து -2 இலட்சம் கையெழுத்துக்களுடன் மகஜர் - Sri Lanka Muslim

முஸ்லிம்களுக்கு எதிரான விஷமப் பிரச்சாரங்களை தடுத்து நிறுத்து -2 இலட்சம் கையெழுத்துக்களுடன் மகஜர்

Contributors

இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் விஷமப் பிர­சா­ரங்­களை முடி­வுக்குக் கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி ஜனா­தி­ப­தியின் செய­லாளர் லலித் வீர­துங்­க­விடம் இலங்கை முஸ்லிம் பேரவை இன்­று மகஜர் ஒன்றைக் கைய­ளித்­துள்­ள­து.

நாட­ளா­வி­ய ரீதியில் பள்­ளி­வா­சல்கள் மூல­மாக முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து திர­டப்­பட்ட சுமார் 2 இலட்சம் கையெ­ழுத்­­துக்கள் அடங்­கிய மக­ஜரே இலங்கை முஸ்லிம் பேரவையின் தலைவர் தாரிக் மஹ்மூத் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினால் ஜனா­தி­ப­தியின் செய­லா­ளரிடம் கைய­­ளி­க்­கப்­பட்­டுள்­ள­து.

இச் சந்­திப்பில் இலங்கை முஸ்லிம் பேர­வையின் உதவித் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் ஈரான் நாட்டிற்கான இலங்கைத் தூதுவருமான எம்.எம். ஸுஹைர், பொருளாளர் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிரதம கதீப் மௌலவி எம். தஸ்லீம், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.   தேசிய தலைவர் கே.என். டீன், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணிகளின் சம்மேளன தேசிய தலைவர்  சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் ,  ஏ.எல். ஹகீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மக­ஜரைப் பெற்றுக் கொண்ட ஜனா­தி­ப­தியின் செய­லாளர் லலித் வீர­துங்க கருத்து வெளியி­டு­கை­யில், இலங்கை முஸ்லிம் பேரவையினால் முன்வைக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் வேண்டுகோளை ஜனாதிபதியின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்வேன்.  பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு முடிவடைந்ததன் பின்னர் அனைத்து மதத் தலைவர்களும் உள்ளடங்கிய மாநாடு ஒன்றை ஏற்­பாடு செய்­ய­வுள்ளோம். இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்­றார்.

இலங்கை முஸ்லிம் பேரவை முன்னெடுத்த கையொப்பம் திரட்டும் பணிக்கு அண்ணளவாக 600 முஸ்லிம் கிராமங்களிலிருந்து சுமார் 196,000 முஸ்லிம் சகோதர சகோதரிககளின் கையெப்­பங்கள் கிடைக்கப் பெற்­ற­மை குறிப்­பி­டத்­தக்­க­து.-TC

Web Design by Srilanka Muslims Web Team