முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பயங்கரவாதிகளின் தொடரும் வன்முறைகளைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் அருகில் தமுமுக போராட்டம்!! » Sri Lanka Muslim

முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பயங்கரவாதிகளின் தொடரும் வன்முறைகளைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் அருகில் தமுமுக போராட்டம்!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்2

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

இலங்கையில் கடந்த சில நாட்களாக 1983ல் தமிழர்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாதிகள் நடத்திய இனக்கலவரங்களை நினைவூட்டும் வகையில் இலங்கையில் கடந்த சில தினங்களாக முஸ்லிம் சிறுபான்மையினர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. சிங்கள பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் கலவரங்களைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இந்தக் கலவரங்களில் 25க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடைபெற்று அவற்றில் 4 பள்ளிவாசல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. பல நூறு முஸ்லிம் கடைகளும் வீடுகளும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. சிறுபான்மை முஸ்லிம்கள் பெரும் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களை பொது பல சேனா, ராவண பாலையா உள்ளிட்ட சிங்கள இனவெறி மற்றும் மதவெறி அமைப்புகள் திட்டமிட்டு நடத்தி வருகின்றன.

முதலில் தமிழர்களை இன பேரழிவு செய்த சிங்கள பேரினவாதிகள் தற்போது இலங்கையில் வாழும் முஸ்லிம்களை அழிக்கும் நோக்கத்துடன் தவணை முறையில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது.

முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை திட்டமிட்டு நடத்தி வரும் பொது பல சேனா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஞானசேரா தேரர் உள்ளிட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், பள்ளிவாசல் உள்ளிட்ட இழப்புகளுக்கு முழுமையான இழப்பீடு உடனே வழங்க வேண்டும்; சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; தம் கடமையை செய்ய தவறிய பாதுகாப்பு படைகளின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறாமல் இருப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை சிறிசேனா அரசு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, தமுமுக தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாலாஜி, தமிழ்தேசீய மக்கள் இயக்கத்தின் சார்பில் தியாகு, தமுமுக மாநிலச் செயலாளர்கள் ஜெ.ஹாஜகானி, காஞ்சி மீரான் மொய்தீன், மமக மாநில அமைப்பு செயலாளர்ம மாயவரம்ம அமீன், இளைஞர் அணிச் செயலாளர் ஷேக் முகம்மது அலி,  மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்கள் எல்.தாஹா நவீன் (தமுமுக), ரசூல் (மமக), தென்சென்னை மாவட்டச் செயலாளர்கள் முகம்மது ஹனீபா(தமுமுக) அஹமது அலி ஜின்னா(மமக) வடசென்னை மாவட்டச் செயலாளர்கள் எப்.உஸ்மான் அலி(தமுமுக), எம்.முஹம்மது தமீம்(மமக)  உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, இலங்கைக்கு எதிராகவும், சிங்கள பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் கண்டனக் கோஷங்களை எழுப்பினார்கள்.

sri_lanka_embassy_chennai தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்2

Web Design by The Design Lanka