முஸ்லிம்களுக்கெதிரான 'டேன் பிரியசாத்' மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸின் சதி படு தோல்வியில் முடிந்தது » Sri Lanka Muslim

முஸ்லிம்களுக்கெதிரான ‘டேன் பிரியசாத்’ மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸின் சதி படு தோல்வியில் முடிந்தது

prasad

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Azeez Nizardeen


வெல்லம்பிட்டியவில் சிங்கள மக்கள் மத்தியில் இனவிருத்தியை இல்லாமலாக்கும் பால் வகையொன்றை விநியோகம் செய்யப்போவதாக போலியான குற்றச்சாட்டை முன்வைத்து எனது சகோதரியின் வீட்டுக்குள் அத்துமீறி பிரவேசித்து அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து அவர்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டி இனக்கலவரம் ஒன்றை உருவாக்க முயற்சி செய்த டேன் பிரியசாத்துக்கு பக்கச்சார்பாக நடந்தது இன்று அம்பலத்திற்கு வந்தது.

டேன் பிரியசாத் போன்ற இனவாதிகள் விடயத்தில் வெல்லம்பிட்டிய பொலிஸாரின் ஒருபக்கச்சார்பான நடவடிக்கைகள் தொடர்பாக இன்று 11.08.2017 புதுக்கடை நீதிமன்ற நீதவான் கேள்வி எழுப்பியதோடு இந்த விவகாரம் தொடர்பாக வெல்லம்பிட்டிய பொலிஸாருக்கும் கடும் ஆட்சேபனையையும் தெரிவித்தார்.

இனவாதிகளுக்கு துணைபோகும் வெல்லம்பிட்டிய பொலிஸார் சமாதானத்தை சீர்குலைக்கமுயற்சி செய்த 1ம் 2ம் நபர்களாக எனது சகோதரியின் பெண் பிள்ளைகளையும் அதே அணியில் மூன்றாவது நபராக இனவாதி டேன் பிரிசாதையும் முன்னிலைப்படுத்தினர்.
குற்றமிழைத்தவனை 3வது நபராகவும் வீடு புகுந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட பிள்ளைகளை 1ம் 2ம் சந்தேக நபர்களாக்கி வெல்லம்பிட்டிய பொலிஸார் இந்த வழக்கை அநீதியான முறையில் வடிவமைத்திருந்தனர்.

இந்த வழக்கை கேள்விக்குட்படுத்திய நீதிபதி, இது வழக்கு எந்த வகையில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது? இந்த அணியில் இருக்கும் மூவரும் ஒரே குடும்பத்தினரா? வீட்டுக்குள் அத்துமீறி பிரவேசித்து அச்சுறுத்தல் விடுத்து அந்த நிகழ்வுகளை வீடியோவாக படமெடுத்து முகப்புத்தகத்தில் பதிவேற்றிய இவர் எப்படி 3வது சந்தேக நபராக வருவார்? என்று கேள்விக்கு மேல் கேள்விகளை தொடுத்தார். நீதவானின் இந்த கேள்விகளுக்கு முன்னால் வெல்லம்பிட்டிய பொலிஸார் திக்கு முக்காடிப்போயினர்.

சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் மிகவும் தெளிவாக இனவாதி டேன் பிரியசாத் என்பவனின் கடந்த கால செயற்பாடுகளை மிகவும் தெளிவாகவும் உணர்வுபூர்வமாகவும் நீதிமன்றிற்கு எடுத்துரைத்தார். விடயங்களை செவி மடுத்த புதுக்கடை நீதிமன்ற நீதவான் இந்த வழக்குத் தாக்கல் தொடர்பாக பொலிஸாருக்கு தனது அதிருப்தியை தெரிவித்ததோடு இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை உருவாக்குபவர்களை சரியாக இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை உடனடியாக மேற்கொண்டு தனித்தனியான வழக்குகளை தாக்கல் செய்து அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
எனது சகோதரிகளின் பிள்ளைகளை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பதாகவும் நீதவான் அறிவித்தார்.

டேன் பிரியசாத் என்ற இனவாதி பற்றி நீதிமன்றில் எடுத்துரைத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள், டேன் பிரசாத் என்ற இந்த நபர் தான்; வெல்லம்பிட்டிய பொலிஸில் அதிகாரி (ஓஐசி போல் செயற்படுபவர்) என்றும் குற்றம்சாட்டினார். பொலிஸாரும் இந்த டேன் பிரசாத்தும் என்ற இனவாதியும் மிகவும் அந்நியோன்யமாக செயற்படுவதை சட்டத்தரணி தெளிவாகவும் உதாரணங்களுடனும் ஹாஸ்யத்துடனும் நீதிமன்றிற்கு அறிவித்தார்.

Web Design by The Design Lanka