முஸ்லிம்களுக்கெதிரான பொதுபலசேனாவின் அடுத்த நகர்வு - Sri Lanka Muslim

முஸ்லிம்களுக்கெதிரான பொதுபலசேனாவின் அடுத்த நகர்வு

Contributors

 இந்து ,பெளத்த மதங்­களை பாது­காப்­ப­தற்­கான பெளத்த, இந்து தர்ம பாது­காப்பு சபை நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் உத­ய­மா­னது. பொது­ப­ல­சே­னாவும் அகில இலங்கை இந்து சம்­மே­ள­னமும் இணைந்து இவ்­வ­மைப்பை உரு­வாக்­கி­யுள்­ளன.
 
இதற்­கான உடன்­பாடு பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கும் இந்து சம்­மே­ள­னத்தின் தலைவர் அருண் காந்­துக்­கு­மி­டையே பௌத்த,இந்து ஏற்­ப­டுத்திக் கொள்­ளப்­பட்­டது.
 
இது தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று கொழும்பில் இடம்­பெற்­றது. இதன்­போது கருத்து தெரி­வித்த பொது­பல சேனாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மத மாற்­றத்தை எதிர்த்து தமிழ் இந்­துக்கள் எழுச்சி பெற வேண்­டிய காலம் வந்து விட்­டது.
 
எனவே, இனியும் பொறுமை காக்­காது இந்­துக்­களும் பெளத்­தர்­களும் ஒன்­று­பட வேண்டும். இன்று அதற்­கான பல­மான ஆரம்­பத்தை எடுத்து வைத்­துள்ளோம்.அதனை மேலும் பலப்­ப­டுத்தி மத­மாற்­றத்­தி­லி­ருந்து அடிப்­ப­டை­வாத சக்­தி­க­ளி­ட­மி­ருந்து எமது மதங்­க­ளையும் கலா­சா­ரத்­தையும் பாது­காத்துக் கொள்வோம்.பெளத்­தர்­களோ இந்­துக்­களோ தமது மதத்­திற்கு முஸ்­லிம்­க­ளையோ கிறிஸ்­த­வர்­க­ளைவோ மாற்­ற­வில்லை. மாறாக அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்­களும் கிறிஸ்­த­வர்­க­ளுமே இந்­துக்­க­ளையும் பெளத்­தர்­க­ளையும் மத­மாற்றம் செய்­கின்­றனர்.
 
வடக்கு கிழக்கில் மட்­டுல்ல தெற்கு மேல் மாகாணம் என அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் எமது மக்கள் மத­மாற்றம் செய்­யப்­ப­டு­கின்­றனர். யாழ்ப்­பா­ணத்தில் இரா­ணுவ முகாம்­களில் புத்தர் சிலைகள் வைக்­கப்­ப­டு­வதை எதிர்த்து தமிழ் அர­சி­யல்­வா­திகள் பாரா­ளு­மன்­றத்தில் குரல் கொடுக்­கின்­றனர்.ஆனால், யாழ்ப்­பா­ணத்தில் காளான்­க­ளைப்­போன்று உரு­வெ­டுக்கும் முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் இவர்­களின் கண்­க­ளுக்கு தெரி­ய­வில்­லையா.
 
அது மட்­டுமா தமிழ் கிரா­மங்கள் பூண்­டோடு முஸ்லிம் மய­மாக்­கப்­ப­டு­கின்­றது. நாடு முழு­வதும் அடிப்­ப­டை­வாத கிறிஸ்­தவ சபைகள் தலை­தூக்­கி­யுள்­ளன. மக்­களின் வறு­மையை போக்கி அடிப்­படை வச­தி­களை வழங்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். அமைப்­புக்­களால் அதனை செய்ய முடி­யாது.
 
கல்­முனை அக்­க­ரைப்­பற்று தமிழ் மக்கள் தாம் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்­பாக நேர­டி­யாக கண்­ட­றிய வரு­மாறு எமக்கு அழைப்பு விடுத்­துள்­ளனர். விரைவில் அங்கு செல்வோம்.

 
அது மட்­டு­மல்­லாது பெளத்த இந்து மதங்­க­ளி­டையே ஒற்­று­மையை வலுப்­ப­டுத்­து­வ­தற்­காக வடக்­கிற்கும் விஜயம் செய்­ய­வுள்ளோம். யுத்­தத்தால் சிதைந்து போன தமிழ் மக்­களின் உள்­ளங்­களை ஆசு­வா­சப்­ப­டுத்தி மீண்டும் எமக்கிடையேயான நட்புறவை பலப்படுத்துவோம் என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொதுபலசேனாவின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனிய நந்த தேரர் மற்றும் இந்து சம்மேளனத்தின் செயலாளர் எம். முரளீதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team