முஸ்லிம்களை குழிதோண்டிப் புதைக்க ரணிலுக்கு ஹக்கீம் மண்வெட்டி எடுத்து கொடுக்கிறார்! » Sri Lanka Muslim

முஸ்லிம்களை குழிதோண்டிப் புதைக்க ரணிலுக்கு ஹக்கீம் மண்வெட்டி எடுத்து கொடுக்கிறார்!

ranil6

Contributors
author image

Ahamed Furhan - Kalmunai

கல்முனையை சூழ்ந்த திகில் இரவு என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை இன்று முகநூலில் காணகிடைத்தது. வடகிழக்கு தற்காலிக இணைந்திருந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையின் போது முஸ்லிம்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாததன் விளைவு எந்தளவுக்கு ஆயுததாரிகளினால் முஸ்லிம்கள் பந்தாடப்பட்டார்கள் என்பதற்கு சான்றாக அமைகிறது.

வடக்கும் கிழக்கும் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த போது முஸ்லிம்கள் மீதான அக்கறை சிங்களவர்களுக்கோ, தமிழர்களுக்கோ இருந்திடவில்லை 2001ம் ஆண்டளவில் ஆட்சிக்கு வந்த ரணில் அரசாங்கம் ரணிலை ஆட்சிக்கு கொண்டுவந்த முஸ்லிம் காங்கிரஸும் அதனுடைய தலைவரும் விடுதலைப் புலிகளுடனான ஒப்பந்தத்தில் முஸ்லிங்களுக்கான தனிதரப்பை இழந்து ரணிலுடைய அரசாங்கத்தின் சார்பாக நின்று இலங்கை முஸ்லிம்களை இந்த நாட்டில் சிறு குழுக்கள் என ஒப்பந்தம் கைச்சாத்திட்டதனால் ஏற்பட்ட விளைவுதான் என்பதையும்,அதேபோல வாழைச்சேனை நகரில் மு.கா தலைவர் மற்றும் இராணுவத்தினர்,பொலிசார், புலிகளால் கொள்ளப்பட்ட முஸ்லிம்களின் ஜனாசாவை பார்வையிட வந்திருந்த நீதவான் முன்னிலையில் நடுவீதியில் அந்த ஜனாசாக்கல் பெற்றோல் ஊற்றி விடுதலைப் புலிகளால் எரியூட்டப்பட்டதும்,

மூதூர் முஸ்லிம்கள் குடியிருப்பு பகுதிக்குள் ஆயுதம் தாங்கிய புலிகள் அத்துமீறி செய்த அட்டகாசங்கள் அதனை தடுத்து நிறுத்த முடியாது, ராணுவத்தார் ரணில் அரசால் விலங்கிடப்பட்டதும், ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாதும், ஒப்பந்தத்திற்கு ஆதரவு வழங்கிவிட்டு முஸ்லிம்களை ஏமாற்ற ரணில் உடனடியாக மூதூரிக்கு வரவேண்டும் என்று ஹக்கீம் சத்தியாக்கிரகம் இருந்ததும், இறுதிவரை ரணில் வருகைதராததால் உண்ணாவிரதத்தை கைவிட்டு விட்டு ஹக்கீம் கொழும்பு சென்றதும், பாதுகாப்பு இல்லாமல் கிழக்கு முஸ்லிம்கள் அச்சத்துடன் துப்பாக்கி தாரர்களிடம் சிக்குண்டு கிடந்ததும், அந்த காலகட்டத்தில் தான் என்பதை கல்முனையை பாதுகாத்தோம் என்பவர்கள் ஹக்கீமுடைய தவறையும், தூரநோக்கு சிந்தனையில்லாத ஹக்கீமுடைய துரோகத்தனத்தையும் நியாயப்படுத்தும் வகையில் வரலாற்றை திரிபுபடுத்தி மறக்கடிக்கச் செய்யும் கட்டுரையாகவே பார்க்க வேண்டியுள்ளது.
கட்டுரையாளர் நடுநிலமைத் தன்மையோடு எழுதியிருப்பாரேயானால் அவர் மேற்குறிப்பிட்ட விடயங்களையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் விபரித்திருக்க வேண்டும்.

இப்படியான மறக்க முடியாத கழுத்தறுப்பை செய்த ஹக்கீம் அவர்கள் மஹிந்த அரசாங்கம் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மேற்கொண்டு வெற்றிகண்டதன் பிற்பாடு வடக்கு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு இப்போது முஸ்லிம்களும் இந்தநாட்டில் ஒருதரப்பாக பார்க்க படுகின்ற வேளையில் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை மீண்டும் இணைத்து கொடுக்கும் முயற்சியில் ஈடுபடும் ஹக்கீமும் அவருடைய கூட்டத்தாரும் முஸ்லிம் சமூகத்தை குழிதோண்டி புதைக்கும் வேளைத்திட்டத்திற்கு மண்வெட்டி எடுத்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மறுபுறத்தில் த.தே.கூட்டமைப்பினுடைய சுமந்திரன் எம்.பி வடக்கு கிழக்கு தனிமாகாண இருக்க வேண்டும் என்றும் வழங்கப்படும் அதிகாரங்கள் மிளபெற்றுக்கொள்ள முடியாதவாறு இருத்தல் வேண்டும் என்றும் கூறுகிறார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரோ தமிழர்களின் அபிலாசைகளுக்கு முஸ்லிம்கள் குறுக்கே நிற்கக் கூடாது என்கிறார்.

கடந்த கால தளும்புகள் எமக்கு ஏராளமாக இருக்கின்ற போது ஹக்கீம் மீண்டும் கத்தியைக் கொடுத்து எங்கள் மீது வெட்டச் சொல்லுவதற்கு எந்த அதிகாரமும் அவருக்கு இல்லை எனவே முஸ்லிம்கள் இந்த வடகிழக்கு இணைப்பு விடயத்தில் மிகவும் அவதானமாகவும் புத்திசாலித்தனமாகவும் நடந்து கொள்ளவேண்டிய காலக்கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து காலத்திற்கு தேவையான கிழக்கை பிறந்த தலைவனின் பின்னால் ஒன்றுதிரண்டு இந்த சதித்திட்டத்திற்கு சாவுமணியடிக்க அணிதிரல வேண்டும்.

Web Design by The Design Lanka