முஸ்லிம்களை தலைநிமிர்ந்து வாழவைக்கக்கூடிய புதிய தலைமைத்துவம் தேவை-மசூர் மௌலானாவின் ஊடக அறிக்கை - Sri Lanka Muslim

முஸ்லிம்களை தலைநிமிர்ந்து வாழவைக்கக்கூடிய புதிய தலைமைத்துவம் தேவை-மசூர் மௌலானாவின் ஊடக அறிக்கை

Contributors

அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா, ஊடகங்களுக்கு எழுதியனுப்பிய ஊடக அறிக்கை-

 
இனப் பிரச்சனையை அடுத்த தலைமுறைக்கு அனுப்பாமல் வாழும் தலைமுறைகள் முடிவுக்குக் கொண்டவர முயலவேண்டும். சமூகங்கள் இணைந்து வேகமாக முன் செல்வதற்கு இது அவசியம். கோபங்கள் இவிரோதங்கள் இகாழ்ப்புணர்ச்சிகள் கடந்து பரஸ்பரம் அனுசரித்து வாழவேண்டிய தேவை கருதி செயற்படவேண்டிய தருணம் இது.இனத்தை காட்டி கொடுக்கும் முஸ்லிம்  சமூகத்துரோகிகலை அரசியலில் இருந்து நீக்க வேண்டும்.

 

இலங்கையில் 1915ஆம் ஆண்டைய முஸ்லீம் கலவரம் முடிவடைந்து 100 வருடம் முடியும் தருவாயில்தான் மீண்டும் அளுத்கம பேருவளை கலவரம் அரங்கேரியுள்ளது. அன்று 1915ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது ஆட்சியில் இருந்த வெளிநாட்டு, உள்நாட்டு பௌத்த தலைவர்களுடன்   அப்போதைய முஸ்லீம் தலைவர்கள் இணைந்து எடுத்த முடிபுகள் 100 வருடத்திற்கு தாக்குப்பிடித்துள்ளது. அடுத்த 100 வருடத்திற்காகாவது தாக்குப்பிடிக்க கூடிய முடிபுகளை  அவசியம் எடுக்கப்படல் வேண்டும். அதனை முன்நெடுப்பது யார்? யார் எமது தலைவர்கள் ?

 

இந்த ஆட்சியில்  முஸ்லீம்களின் தலைவர்கள் எனச் சொல்லிக்கொண்டிருக்கும் தலைவர்கள் ஏன் முஸ்லீம் சமுகத்திற்காக இதுவரை பேசாமடந்தையாக இருக்கின்றனர். இன்னும் ஏன் இந்த சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி அவர்கள் பாதிக்கப்பட்ட இடத்திற்கு போகவில்லை. கொழும்பில் இருந்து 35 கி.மீற்றர் தூரத்தில் இருக்கும் அளுத்கமவுக்கு அவர் செல்லவில்லையே. இந்த பிரச்சினைகள் தர்கா நகர் பேருவளையில் நடைபெறும்போது இந்த தலைவர்கள்  எங்கே இருந்தார்?

 

கொழும்பிலலேதானே இருந்தார். இவரது இல்லத்திலிருந்து;  45 நிமிட தூரத்தில்தானே இந்த அளுத்கம பேருவளை இருக்கின்றது. ஏன் இவர் அதுவும் மேல்;மாகாணத்தில் இருக்கின்ற சகல முஸ்லீம்களின் தானே தலைவன் எனச் சொல்லிகொண்டிருப்பவர்  ஏன் பாதிக்கப்பட்ட மக்களை இன்னும் சென்று பார்வையிடவில்லை. எனக் கேட்க விரும்புகின்றேன். எமது முஸ்லீம்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் வீடுகள், பள்ளிவாசல்கள் மற்றும் 4 உயிர்கள் 80 க்கும்  மேற்பட்ட  காயப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள்   இந்த நோன்பு காலத்தில் கஸ்டப்பட்டு நடு வீதியில் அகதிகளாக நிற்கின்றனர். இதற்காக இந்த தலைமைத்துவம் எடுத்த முடிபுகள் என்ன?

 

இவர்களெல்லாம் காலத்திற்கு காலம் முஸ்லீம் சமய திணைக்களத்திற்கு வரும்  ஈச்சம்பழத்திற்கும் ஹஜ் கோட்டாவையும் தானே பொருப்பெடுத்துக் கொண்டு அதனை பங்கிடுவதிலேயே தமது நேரத்தையும்   செல்வாக்கையும் செலவழிக்கின்றனர். இந்த ஹஜ் கோட்டாவைக்கூட சமமாக பங்கிடாமல் அநீதி எனச் சொல்லி  எமது சமுகம்  உயர் நீதிமன்றம் வறை சென்று அநீதி என்று சொல்லி நீதி கேட்டு அதற்கு தடை உத்தரவு எடுக்கவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். இதுவா எமது சமுகத்தின் பிரச்சினை ?
அளுத்கம முஸ்லீம்களது பிரச்சினையில் 1000 கி.மீற்றர்களுக்கு அப்பால் உள்ள ஜக்கிய நாடுகளின் அதிகாரிகளுக்கு குரல் கொடுக்கின்ற நிலைமைக்கு அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது. ஆனால் எமது அரசியல்வாதிகளுக்கு இநத அவலக் குரல் அவரது காதுகளுக்கு கேட்கவில்லை போழும்.

 

எமது நாட்டில் வாழும் முஸ்லீம்களது அரபு நாடுகளின் இருந்து வந்த உடை, உணவு ஹலால், கலாச்சாரம் பள்ளிவாசல் பிரச்சினைகள் பற்றிய பிரச்சினைகள்  இந்த நாட்டில் அடிக்கடி எழும்போது எமது அரசியல் தலைவர்கள் எடுத்த முடிபுகள்தான் என்ன ? இப் பிரச்சினைகள் பற்றி  பெரும்பாண்மை சமுகத்தினருக்கும் அவர்களின் மதத் தலைமைகளுக்கும்   அதனைப்பற்றி அந்த மக்களுக்கு உரிய விளக்கம் அதன் தாப்பரியம் பற்றி சரியான விளக்கத்தினை தெளிவுபடுத்த தவறிவிட்டார்கள்.

 

எமது நாட்டில் எவ்வளவோ பராம்பரியம் உள்ளது. அதனை நாம் ஏனைய சமுகத்திடம் வெளிக்கொணர்கின்றோமா ? பௌத்த மக்களது சம்பிரதாய கலாச்சாரத்தை  ஒரு நிகழ்வை ஆரம்பிப்பதற்கு பரை (பேர) அடிக்கும் நிகழ்;வை அவர்கள் சர்வதேசத்தில் வரை கொண்டுசென்றிருக்கின்றனர். எமது முஸ்லீம் சமுகத்தில் எந்த காலாச்சாரத்தை நாம் முன்னெடுத்துள்ளோம், எனக் கேட்க விரும்புகின்றேன்.
இதனாலேதான் இரண்டு பக்கத்திலும் தப்அபிப்பிராயங்களும் அல்லது ஒருவரை ஒருவர் விளங்கிக்கொள்ளாமை போன்ற பிரச்சினைகள் உள்ளது. முஸ்லீம்களின்  வாழ்க்கை முறை கலை கலாச்சாம் மத வழிபாடுகள் பற்றி பௌத்தர்களுக்கு ஜக்கியமாக எடுத்துக் கூற நாம் தவறிவிடடோம். நமது மத முறைமைகள் சகலதையும் நமது வட்டத்துக்குள்ளேயே வைத்துக்கொண்டு இருக்கின்றோம்.   

 

தற்பொழுது நாம் மிகவும் நவீன விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இப்போதைய யுகம்  டிஜிட்டல் உலகம், இன்டநெற், பேஸ்புக், வெப்தளம்,  போன்ற யுகத்தில் வாழ்கின்ற நாம் மிக எளிதில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள்  உள்ளன. இதனை எமது சமுகத்தில் செயல்படுத்த எந்த முஸ்லீம் தலைவர்கள் உள்ளனர்.  யார் முன்வருகின்றனர்? அல்லது இலங்கையில் வாழும் சமுகம் பற்றி அரபு நாடுகளுக்காவது அரபு மொழியில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோமா? அதற்காக எமது எந்த வெப்தளம் ஊடகம் இந்த நாட்டில் செயல்படுகின்றது. அதற்காக எந்த சமுகவாதிகள் முன்வந்திருக்கின்றார்கள்.

 

இந்த நாட்டில்  20 இலட்சம்; முஸ்லீம்கள்  வாழ்ந்து கொண்டிருகின்றோம். எமது சமுகத்தின் பிரச்சினைகள் எமது பாரம்பரியம், கலை கலாச்சாரத்தை அரபு நாடுகளுக்கு கொண்டு சென்றிருக்கின்றோமா? அதற்கான வேலைத்திட்டம் நம்மவரிடம் உள்ளதா? தற்காலிகத் தலைவர்கள் என தாமே சொல்லிக்கொண்டு திரிகின்றோம். முஸ்லீம்களுக்கு பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது அதன் தாக்கத்தினை சர்வதேசயமயமாக்கினோமா? சர்வதேச சமுகத்தில் இருந்து பாதிக்கப்பட்ட சமுகத்திற்காக ஏதாவது திட்டம் ;வகுக்கப்பட்டுள்ளனவ்h ? அதனை ஒப்படைத்து நிவாரணம் பெற்றுக் கொடுத்தோமா ?

 

இந்த உலகில் 53 முஸ்லீம் நாடுகள் உள்ளன. அவர்களிடமிருந்து எமது பிரச்சினையைச் சொல்லி உதவி செய்யச் சொன்னோமா? இவ்வாறு எதிர்காலத்தில் பிரச்சினை ஒன்று வரமுடியாமல் நாம் வரைந்துள்ள தற்காப்பு வேலைத்திட்டம் என்ன ?
கடந்த கால முஸ்லீம் தலைவர்களான சேர் ராசீக் பரீட், அறிஞர் சித்திலெப்பை, கலாநிதி ரீ.பி.ஜாயா, பதியுத்தீன் மொஹுமுத்;, எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள் காலத்தில் செய்தவற்றையே அவர்கள் மறைந்த பின் அவர்களது சேவைகளையும் நினைவு கூறுகின்றோம். 2014 வரையும் இந்த தலைவர்களது சேவையும் தலைமைத்துவ பண்பையும் நாம் நினைவு கூறுகின்றோம்.

 

எம் மததியில் உள்ள இளம் பரம்பரையினர் 2050ம் ஆண்டில் தற்போதைய எந்த முஸ்லீம் தலைவர்களைப் பற்றி  நினைவுகூறுவார்கள்?. எமது சமுகத்தில் உள்ள ஒரு கெட்ட பழக்கம  ஒர் தலைவர் உயிருடன் இருக்கும்போது அவர் பற்றி நினைவு கூறாது அவர் இறந்த பின்புதான் அந்த தலைவரைப்பற்றி சிந்திப்போம்.     அவர்கள் இந்த சமுகத்திற்கு என்ன செய்திருக்கின்றார்கள் ? என்று அலசுவோம். அதனைப்ப்ற்றி நினைத்துப் பேசுவோம்.

 

ஆனால் மலேசியா, பாக்கிஸ்தான், வங்களதேஸ், இந்தோனோசியா போன்ற நாடுகளின் வாழும் முஸ்லீம்களுக்கென்று  பிரச்சினைகள் எழும்போது அதுக்கு உதவுவதற்கு மத்திய கிழக்கு நாடுகளுக்கு எத்திவைக்கின்ற சக்தி அந்தநாடுகளின் தலைவர்களுக்க உண்டு. எமது நாடு ஒரு சிறிய நாடு அதிலும் 20 இலட்சம் ;முஸ்லீம்களே வாழ்கின்றோம். நமது பிரச்சினைகைளை அவர்களிடம்  எத்திவைத்தால் நிச்சயம் உதவுவார்கள். யார் அதனை எத்தி வைப்பது? எமது சமுத்தின் தலைவர் யார்?

 

அண்மையில் அளுத்கமவில் நடைபெற்ற சம்பவம் ஒரு தனிநபர்களுக்கிடையில் நடைபொற்ற சிறு சம்பவம்.  அந்த பிரச்சினை எழுந்த அன்றே  அந்த களத்திற்குச் சென்று  எந்த முஸ்லீம் தலைமை போய் அதனை தீர்த்து வைத்தது. அந்த சிறுபிரச்சினை மதப்பிரச்சினையாக மாறி இனவாதமாக மாறி கலவரமாக அரங்கேரி பயங்கரவாதமாக மாறியுளளது.

 

வட கிழக்கை தவிர இதற முஸ்லீம்ககள் பௌத்த சமுகத்தில் தேங்காயும் பிட்டும்போன்று  பிண்னிப்பிணைந்து வாழ்கின்றோம். இந்த இதற வாழுகின்ற முஸ்லீம் மக்களுக்கு  எதிர்காலத்தில் மேலும் இவ்வாறன பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனைப் பாதுகாப்பது யார்? என்ன பாதுகாப்பு வலைய முறைகளை நாம் வகுத்துள்ளோம்.

 

ஆகவேதான் முஸ்லீம்களுக்கு ஒர் சீரிய சகல சமுகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதும் சகல நாடுகளிலும் குறிப்பாக அரபு நாடுகளில் அரபு மொழி ஊடாக தொடர்பு  கொள்ளக் கூடியதும் சகல துறைகளிலும் உள்ள புததிஜீவிகளின் உதவியுடன் ஆலோசனையுடன் இயங்கக் கூடிய ஒரு உறுப்படியான  ஒர் முஸ்லீம் தலைமைத்துவம் அவசியம் தேவைப்படுகின்றது. தற்போதைய அரசியலில் உள்ள தலைமைகள் தங்களுக்குள்ளேயே போட்டியும் பொறாமையும் விட்டுக்கொடுக்காமையும் பதவி ஆசை, சமுகப் பிரச்சினை என்று வந்தால் ஒருமித்த குரல் இல்லாமை தானே தலைவர் என்ற அகம்பாவம் பிடித்துள்ளமை அண்மைக் காலத்தில் இருந்து அவதாணிக்க முடிகின்றது.

 

இதனால் நமது சமுகத்தின் கட்டுக்கோப்பை மிக இலகுவாக பிரித்து வேடிக்கை பார்ப்பதற்கு நாமே வழிவகுத்துக் கொடுத்துள்ளோம்.
முஸ்லீம்களுக்கென்று சோதனைகள் ஆபத்துக்கள் நெருங்க, நெருங்க நாம் அடக்கியும் சமாதானமாகவும் நிதானமாகவும் செயல்படவேண்டும். நமது பிரச்சினைகளளை  இறைவனிடத்தில் எத்தி வைத்து பொருமையை கடைப்பிடிக்க வேண்டும்.  நம்மிடத்தில் கடும்போக்கு,திடிர் ஆவேசம், நமது இளைஞர்களை கட்டுக்கோப்பில் நாம் வைத்துக்கொள்ள வேண்டும்.

 

நாம் மற்றவர்களது மதம் கலை கலாச்சார மற்றும் பழக்க வழங்கங்களுக்கு சரியான அனுகுமுறையை கையாழுதல் வேண்டும்.  நமது சிறிது அனுகுமுறையால் முழுச் சமுகமும் பாதிக்கக் கூடிய முறையில் நாம் செயல்படுகின்றோம். பௌத்த மக்களிடம் எம்மைப்பற்றி நிறைய சந்தேகங்கள் உள்ளது. அதனை நிதானமாகவும் பக்குவமாகவும் அவர்களை அனுகி  தெளிவுபடுத்த வேண்டிய பொருப்பு எமது சமுத்தின் தலைவர்களது பொறுப்பாகும்..

 

நமது சமுகத்தின் கல்வி,தொழில் இளைஞர்களது தலைமைத்துவம்,மார்க்ககடைமைகள் பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் என்ன? அதனை முன்நெடுக்கும் தலைவர் யார்? எவ்வித அரசியல் லாபம் கருதாது நமது பதவியை பாதுகாப்பதற்காக வேண்டி வாய் மூடி மௌனிகளாகிக் கொண்டிருக்கும் தலைமைத்துவம் நம்மத்தியில் இருக்கக் கூடாது? ஆகவே தான் எமது சமுகத்தில் சிறந்ததொரு தலைமைத்துவம் அவசியம் தேவைப்படுகின்றது. அந்த தலைமைத்துவம் இந்த நாடடில் உள்ள சகல புத்திஜீவிகளையும் அனுகி அவர்களது ஆலோசனைக்கமைய நமது சமுகத்தின் பிரச்சினைகளை முன்னெடுத்தல் வேண்டும்.  

 

நாம் இலங்கையில்  வாழ்ந்தாலும் நாம் வாழும் சகல இனங்களும் ஒர் ரத்தம், இந்த நாட்டில் முஸ்லீம்கள் வந்து குடியேறும்போது ஒரு போதும் அராபிப் பெண்களை இந்த நாட்டுக்கு அழைத்துக் கொண்டு வரவில்லை. இங்குள்ள சிங்கள பெண்களையே நாம்  திருமணம் முடிந்து பின்னர் வந்த சமுகமாகும். ஆகவே எம்மிடத்தில் ஒற்றுமை. விட்டுக்கொடுப்பு சிறந்த அரசியல் தலைமை அந்த தலைமைத்துவத்திற்கு அடிபணிதல் எமது சமுகத்தில் வளர வேண்டும்.

 

தற்போதைய சில தலைமைகள் முஸ்லீம்களுக்கென்று ஒரு  பிரச்சினை ஏற்படும்போது தனது ஜீப்புடன் பொடிகாட்டுகளுடன்  எஸ்.டி.எப் மெய்ப்பாதுகாவலருடன்  போய் அவ்விடத்தில் பாhத்துவிட்டு வந்தால் மட்டும் போதாது அதுவல்ல தலைமைத்துவ பண்பு.  
நாம் அரசாங்கத்தினால் தரப்பட்ட  பதவியை மட்டும் பாதுகாத்துக்கொண்டிருந்தால் போதும். சமுகம், சமுகம் என்று சொன்னால் தன்னை இனவாதி  அல்லது இந்த சமுகப்; பிரச்சினைகளை தலைக்கெடுத்;தால் இந்த சமுகம் என்னை போற்றுமா அல்லது தூற்றும் என்று எண்னினால் ஒருபோதும் சமுகத்தின் முன் பிரச்சினைகளை முன்எடுக்க முடியாது.

 

போற்றுவார் போற்றற்றும் தூற்றுவார் தூற்றற்றும். எனத பணி தொடரவேண்டும். என்ற தொணியில்  செயல்படல் வேண்டும்.
முஸ்லீம் சமுகம் ஒருபோதும் இந்த நாட்டை துண்டாடவோ அல்லது ஈழப்போருக்கோ  துணைபோகவில்லை. அவர்கள் ஏனைய சமுகத்தின் சமாதான பாலமாகவே இருந்து வந்துள்ளார்கள். தர்கா நகர், பேருவளை வாழும் மக்கள் ஒருபோதும் பிரச்சினைகளுக்கு போகாமல் தமது பாடும் தமது தொழிலையும் வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டுவரும் அப்பாவி முஸ்லீம்கள். தர்காநகரில் கூட அனேகமானோர் அரசாங்க தொழிலில்  ஆசிரியர் ஆசிரியைத் தொழிலையே செய்துவருகின்றனர்.

 

ஏனையோர் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதித்து அதனை கொண்டுவந்து கடை ஒன்றை நிர்மாணிதது அதன் முலம் தமது  வீடுகளையும் குடும்பத்தை கட்டிக் காத்து வரும் குடும்பங்களே வெகுவாக பாதிக்கப்பட்டோர்.   முதன் முதலில் அராபியர் வியாபாரத்திற்கு வந்து இறங்கிய பிரதேசம் பேருவளையாகும்.  அவர்கள் இங்கு தங்கிநின்று சிங்களப் பெண்களை திருமணமுடித்து வந்த பரம்பரையினர்தான் இந்தப்பிரதேசத்தில் வாழ்  முஸ்லீம்களாகும்..

 

அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தர்கா டவுனுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை அவர் பார்வையிட்டது அந்த மக்களுக்கு ஒரு ஆறுதல் அளித்தது.  கிழக்குமாகாணத்திலிருந்தெல்லாம் முஸ்லீம் மக்கள் அளுத்கம பேருவளை பிரதேசத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவது உதவி வருகின்றனர்.  கிழக்கு மாகணத்தில் முஸ்லீம்கள் 3 நாட்கள் எமது கடைகளை மூடி நமது துக்கத்தை தெரிவித்தனர்.   

 

  ஆகவே தான் இனியாவது நாம் நம்மை வளப்படுத்தி விட்டுக்கொடுத்து அண்னிய சமுகத்தினரிடையே எமது சந்தேகங்களை பேசி அதனை தீர்ததுக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி, நியாயம், நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும். பிரச்சினைகளுக்கு சூத்திரதாரிகளாக இருந்தவர்கள் சட்த்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கல் வேண்டும். ஏனைய பிரதேசத்தின் வாழும் முஸ்லீம் சமுகம் தலைநிமிர்ந்து அவர்களுக்குள்ள சகல உரிமைகளுடன் வாழ வழிவகுக்க வேண்டும். அதனைக் கொண்டு செல்லதொரு முஸ்லீம் தலைமைத்துவம் தேவைப்படுகின்றது.

 

 

masoor moulana1.jpg2

 

masoor moulana1.jpg3

Web Design by Srilanka Muslims Web Team