முஸ்லிம் அடிப்படைவாத கொள்கையை, பதிவேற்றிய PHI கைது..! - Sri Lanka Muslim

முஸ்லிம் அடிப்படைவாத கொள்கையை, பதிவேற்றிய PHI கைது..!

Contributors

முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பின் கொள்கைகளை முகநூலில் பதிவு செய்து வந்த மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த பொது சுகாதார உத்தியோகத்தர் ஒருவரை நேற்று மாலை (02) குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து 3 மாத கால பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

காத்தான்குடியில் பொது சுகாதார உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் 38 வயதுடைய குறித்த நபர் முஸ்லீம் அடிப்படைவாத அமைப்பு ஒன்றின் அடிப்படைவாத கொள்கைகளை முகநூலில் தரவேற்றி வந்ததுடன் அந்த அமைப்புடன் தொடர்புகளை பேணிவந்த நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று (02) அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் 3 மாத பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் பிரிவினர் மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார். 

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

Web Design by Srilanka Muslims Web Team