முஸ்லிம் ஆசிரியர்கள் கலாசார ஆடை அணியலாமா? இலங்கை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன? » Sri Lanka Muslim

முஸ்லிம் ஆசிரியர்கள் கலாசார ஆடை அணியலாமா? இலங்கை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

face book

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Afshin Deedat


2014 ஆம் ஆண்டு ராஜ­கிரிய ஜனாதிபதி பாலிகா வித்­தியாலய அதிபர், முஸ்லிம் மாணவி ஒருவரின் தாயார் ஹிஜாப் அணிந்து பாடசா­லைக்குள் நுழைவதற்கு தடை விதித்த விவகாரம் தொடர்பில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்த இடத்தில் கவ­னத்தில் கொள்ளத்தக்கதாகும்.

அப்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையில் நீதியரசர்களான கே.ஸ்ரீபவன், பிரி­யந்த ஜயவர்த்தன ஆகியோர் கொண்ட குழுவே இத் தீர்ப்பை வழங்கியது.

அதில் முஸ்லிம் மாணவர்களின் தாய்மார், முகத்தை மூடாமல் முஸ்லிம் கலாசார உடைகளுடன் பாட­சாலை வளாகத்திற்குள் நுழைவ­தற்கு பாடசாலைகள் அனுமதி வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்­கப்பட்டது. அத்துடன் தேசிய மற்றும் மாகாண பாடசாலைக­ளுக்கு இந்த தீர்ப்பு பொருந்தும் என்றும் உயர் நீதிமன்றம் இத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியது.

இதேபோன்று மேல், ஊவா, மற்றும் தென் மாகாண சிங்களப் பாடசாலைகளில் இவ்வாறான ஆடை குறித்த சர்ச்சைகள் ஏலவே தோன்றியுள்ளன. இவற்றில் சில வழக்குகள் நீதிமன்றத்திற்குச் சென்று தீர்வு காணப்பட்டுள்ளன.

இவை எவற்றிலுமே முஸ்லிம் மாணவிகளோ அல்லது ஆசிரியர்­களோ கலாசார ஆடைகளை அணிய முடியாது எனத் தீர்ப்ப­ளிக்கப்படவில்லை.

Web Design by The Design Lanka