முஸ்லிம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் முதலாவது மியுசியம் காத்தான்குடியில் - Sri Lanka Muslim

முஸ்லிம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் முதலாவது மியுசியம் காத்தான்குடியில்

Contributors

-முகம்மட் சஜி-
முஸ்லிம்களின் பாரம்பரியம் கலாச்சாரத்தினை பிரதிபளிக்கும் வகையில் இலங்கையில் அமைக்கப்படும் முதலாவது முஸ்லீம்களின் மியூசியம் மட்டக்களப்பு காத்தான்குடியில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மேற்பார்வையில் அமைக்கக்கட்டு வருகின்றது.

முழு இலங்கையினையும் மையமாகக் கொண்டு காத்தான்குடி பிரதானவீதியில் அமைக்கப்பட்டு வ
ரும் மியூசியத்தின் வேலைகள் தற்போது துரிதமாக இடம்பெற்று வருகின்றது. இவ்வேலைகளை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான பொருளியலாளர் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கருத்து தெரிவிக்கையில் இலங்கையை பொருத்த வரை ஏனைய இனங்களையும் மதங்களையும் போற்றும் வகையில் மியூசியங்கள் காணப்படுவதாகவும் முஸ்லிம்களின் பாரம்பரியம் கலாச்சாரத்தினை பிரதிபளிக்கும் வகையில் இலங்கையில் மியூசியங்கள் அரிதாக காணப்படுவதாகவும் இதற்காக முஸ்லீம்களின் பாரம்பரியமே உள்வாங்கப்படும் மியூசியமாகவே இது அமையுமென பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team