முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சு வார்த்தைகளை தவிர்த்து கொள்ள வேண்டும் - அம்பாறை மாவட்ட த.தே.கூ உறுப்பினர்கள் தலைமைகளுக்கு கடிதம் - Sri Lanka Muslim

முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சு வார்த்தைகளை தவிர்த்து கொள்ள வேண்டும் – அம்பாறை மாவட்ட த.தே.கூ உறுப்பினர்கள் தலைமைகளுக்கு கடிதம்

Contributors
author image

Editorial Team

அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக கல்முனையில் த.தே.கூட்டமைப்பு தலைமைகள் முஸ்லிம் காங்கிரசுடன் பேசுவதனை தவிர்த்துக்கொள்ளல் வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அவர்களின் தலைமைகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

 

அம்பாறை மாவட்டத்தில் கடந்த கால அரசியலும், தற்கால அரசியலும் நன்கு அறிந்திருந்தும் எமது மாவட்டத்தில் உள்ள எவரது கருத்துக்களுக்கும் இடமளியாது தாங்களாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுப்பது பெரும் வேதனையைத்தருகின்றது.

 

அம்பாறையில் அதுவும் குறிப்பாக கல்முனையில் பேச்சு நடத்துவதனை தாங்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றோம் என த.தே.கூட்டமைப்பின் தலைமைக்கு அனைத்து அம்பாறை மாவட்ட த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் கையொப்பம் இட்டு கடிதம் ஒன்றினை கையளித்து இருக்கின்றனர்.

 

இம்முடிவினை எடுத்ததற்கான காரணங்களை பின்வருமாறு பட்டியல்படுத்தி இருக்கின்றார்கள்.

 

கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு நேரடி எதிரியாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்தமை.,

 

மத்திய மற்றும் கிழக்கு மாகாணசபையின் ஊடாக வழங்கப்படும் வேலை வாய்ப்புக்களில் முற்றாக தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டமை.

 

கிழக்கு மாகாணசபை ஊடாக பகிர்ந்தளிக்கப்படும் அபிவிருத்தி விடயங்களில் தமிழர்பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றது.

 

கல்முனை மாநகரசபை. போத்துவில் பிரதேச சபை ஊடாக தமிழர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதிகள்.

கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட ஆட்டோ சங்கத்தின் பிரச்சனை.

 

வீதிகளுக்கு பெயர் மாற்றுவதற்கான பிரச்சனை

 

நில ஆக்கிரமிப்பு, கலாசார சீர்கேடுகள் போன்ற பிரச்சினைகள் அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இவையாவற்றையும் அறிந்திருந்தும் இவர்களுடன் பேச்சு நடத்தியாகவேண்டுமா என ஒட்டு மொத்த த.தே.கூட்டமைப்பினரும் தலைமைகளுக்கு கடிதம் மூலம் தங்களது கையொப்பத்தினை இட்டு கையளித்திருப்பதாக அம்பாறை மாவட்ட த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

 

01

 

03

Web Design by Srilanka Muslims Web Team