முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் » Sri Lanka Muslim

முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம்

_01

Contributors
author image

சம்மாந்துறை அன்சார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் இன்று (12) சனிக்கிழமை கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நிந்தவுரில் நடைபெற்றது. .

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு காத்திரமான பல முன்னெடுப்புகளை எதிர்காலத்தில் முன்னெடுத்து செயற்படுவதற்கான ஆரம்ப கூட்டமாக இது அமைந்திருந்தது.

அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளர் ஜப்பார் அலியின் ஏற்பாட்டின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், பிரதியமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைஸல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சுர், கிழக்கு மாகாண சுகாதாரை அமைச்சர் ஏ.எல. நஸீர், கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் செயலாளர் மன்சுர் ஏ. காதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

_01 _04

Web Design by The Design Lanka