முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ஏ.எல்.எம்.நஸீர் ..! - Sri Lanka Muslim

முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ஏ.எல்.எம்.நஸீர் ..!

Contributors

முஸ்லிம் காங்கிரஸின் நம்பிக்கைக்குரிய பிரதேசமாக கல்முனைக்கு அடுத்த நிலையில் அட்டாளைச்சேனை பிரதேசம் உள்ளது.

கடந்த கால தேர்தல் முடிவுகளின் பிரகாரம் பொத்துவில் சுமார் இரண்டாயிரம் வாக்குகளோடும் அக்கரைப்பற்று அதாஉல்லாவின் அசைக்க முடியாத கோட்டையாக இருப்பதனால் அங்கும் இரண்டாயிரம் வாக்குகளை முகாவால் தாண்ட முடியாமல் திணறி வருகின்றது.

நிந்தாவூர் பிரதேச சபையை முகா இழந்து தவித்துக் கொண்டிருப்பதோடு சம்மாந்துரை மக்களும் பல ஆண்டுகளாக முகாவை கைகழுவி விட்டனர்.

இறக்காமம் மூவாயிரம் வாக்குகளோடு தனித்து நிற்கின்றது.

இதே வேளை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது மக்கள் முகாவை புறக்கணித்த போதிலும் சுமார் இருபதாயிரம் வாக்குகளை முகா அப் பிரதேசத்தில் பெற்றிருந்தது.

ஆனால் அட்டாளைச்சேனை பிரதேசம் முகாவின் வரலாற்றில் தொடர்ச்சியாக பிரதேச சபையை வெற்றி கொண்டு தலை நிமிர்ந்து நிற்கிறது.

இந்த அடிப்படையில் பார்க்கும் போது கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சை பெறக்கூடிய தகுதி அட்டாளைச்சேனைக்கும் கல்முனைக்கும் உள்ளது
கல்முனைக்கு பாராளுமன்ற பிரதிநித்துவம் இருக்கின்ற காரணத்தினால் அட்டாளைச்சேனை மண்ணுக்கு வழங்க வேண்டிய தார்மீக பொறுப்பு முகாவுக்கு‌ உள்ளது.

கடந்த கிழக்கு மாகாண சபை ஆட்சியில் ஏ.எல்.எம்.நஸீர் இரண்டு வருடங்கள் சுகாதார அமைச்சராக இருந்த போது யாருமே செய்யாத வேலைத்திட்டங்களை இன வேறுபாடுகளுக்கப்பால் செய்து தமிழ்.சிங்கள மக்களின் நன்மதிப்பை பெற்றார்.அதே போல் தேசிய அரசியலிலும் இரண்டு வருடங்கள் இருந்த போதும் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற் கொண்டிருந்தார்.

ஒரு கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான தகுதியாக தனது சொந்த மண்ணில் கட்சியின் செல்வாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.அது நஸீருக்கு மாத்திரமே உள்ளதுடன் மாகாணம் மற்றும் தேசிய ரீதியில் அறியப்பட்ட அரசியல் வாதியாகவும் நல்ல மனிதராகவும் நஸீர் இருந்து வருகிறார்.

எனவே எதிர்வரும் கிழக்கு மாகாண சபையைத் தேர்தலில் முகா முதலமைச்சர் வேட்பாளராக நஸீர் அவர்களை பிரகடனப்படுத்த வேண்டும் என்பதுவே கட்சியின் உண்மையான போராளிகளின் விருப்பமாகும்

(ஏ.எல்.நஸார்.. அக்கரைப்பற்று)

Web Design by Srilanka Muslims Web Team