முஸ்லிம் காங்கிரஸுக்குள் மற்றுமொரு நெருக்கடி - Sri Lanka Muslim

முஸ்லிம் காங்கிரஸுக்குள் மற்றுமொரு நெருக்கடி

Contributors

(கதிரவன்)

கல்முனை  மாநகர முதல்வர் விவகாரம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சியின் மிக முக்கியமான முக்கியஸ்தர்கள் மேயர் விடயம் தொடர்பாக பல்வேறு விடயங்களை முனு முணுத்து வருவதுடன் சில இடம்களில் பகிரங்கமாகவும் பேசுகிறார்கள்  எது எப்படி இருந்தாலும் சந்திக்கி சந்தி கல்முனை மேயர் விவகாரம்,கடைத்தெருக்களில் மேயர் விவகாரம் போதாக்குறைக்கு பள்ளிகளில் …..

இவை இவ்வாறு இருக்க இது  விடயத்தில் அரசியல் காய் நகர்த்தல்களும் ஏராளம் இவ்விடயம் தொடர்பாக கட்சியின் முக்கியஸ்தர்  தனது பெயரை குறிப்பிட விரும்பாத ஒருவர்  தமது கருத்தை இவ்வாறு தெரிவிக்கிறார் கட்சியின் தலைவர்,செயலாளர்,தவிசாளர் முன்னிலையில் மேயர் பதவி எடுக்க வரும்  பொழுது செய்துகொண்ட  உடன்படிக்கையை இவர் மீறாமல் நிறைவேற்ற வேண்டும்

மேயர் சிராஸ் மீராசாஹிப் தான் எப்பொழுதும் கட்சியின் கட்டளையை மீறமாட்டேன் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நான் இப்பவே வெற்றுப் பேப்பரில் ஒப்பமிட்டு தருகிறேன் என மேயராக வருமுன் தலைவர்,செயலாளர்,தவிசாளர் முன்னிலையில்  கூறிய  விடயத்தை  அவர் மறந்து செயல் படக் கூடாது

அதற்கு மாறாக இன்று அவர் கூறும் கதைகள் வேடிக்கையான விடயமாக இருப்பதுடன் இன்னும் சிறு பிள்ளை போன்று கட்சியின் முக்கியத்துவத்தை உணராமல் நடந்து கொள்ளும் விடயம் அவரது முதிர்சி இன்மையை காட்டுகின்றது

கட்சியின் கொள்கைக்கும்,சட்டதிட்டங்களுக்கும்  மேயர் சிராஸ் மீராசாஹிப் கட்டுப்பட்டு  நடக்காமல் போகும் பட்சத்தில் கட்சி அவ்விடயம் தொடர்பாக

நடவடிக்கை எடுப்பதிலும் ஐயமில்லை

இறக்காம  பிரதேச சபை தவிசாளர்  தலைமைத்துவத்திற்கும் கட்சிக்கும்  மாறு

செய்யாமல் தன்  கைப்பட இராஜினாமாக் கடிதத்தை எழுதிக் கொடுத்து கட்சிக்கு கட்டுப்பட்டு தனது தவிசாளர் பதவியினை மிகவும் கௌரவமான முறையில் விட்டுக்கொடுத்து  முன்மாதிரியாக நடந்த விடயம் நாடே அறிந்தவிடயமாகும்

இவ்வாறெல்லாம்  நடைபெர்ருக்கொண்டிரிக்கும்  போது  தான் மேயர் பதவியில் இருந்து விலகுவதை சாய்ந்தமருது மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுவது எவ்வாறு நியாயமாகும் இவருக்கு சாய்ந்தமருது மக்கள் மட்டும் வாக்களிக்கவில்லையே தேர்தலின்  போது  கிடைத்த வாக்குகள்  சிராஸ் மீராசாகிபுக்கு கிடைத்த வாக்குகள் அல்ல அது கட்சிக்கு கிடைத்த வாக்குகள் என்பதை மறந்துவிடக் கூடாது

கல்முனை மேயர் விடயம்  தொடர்பான விசேட  கூட்டம் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹகீம் தலைமையில்  இன்று (24.10.2013) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்துகொள்ளவில்லை

கடந்த  காலத்தில் சிராஸ் மீரசஹிபை மேயராக்கும் விடயத்தில் சதுரங்கம் விளையாடி மேயராக்கியத்தில் பாரிய பங்குவகித்த இவர் கல்முனை மாநகர மேயர் விடயம் தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்திற்கு சமூகம் தராமையான விடயம் இவரது இரட்டை வேடத்தை காட்டுகிறது

கல்முனை மாநகரின் மேயர் விடயத்தில் தலைவர்  ரவூப் ஹகீம்  சிராஸ் மீரசஹிபை தனது மேயர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு பணித்துள்ளார் ஆகவே இதை செய்வதுதான் நாகரீகமாகும்

தலைவர் எனது இரண்டு  வருட மேயர் பதவிக்காலம் முடிந்தபிறகு இராஜினாமா செய்யச்சொன்னால் நான் கட்டாயம் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு நடப்பேன் என பல மேடைகளில் பேசியதையும் இலகுவில் மறந்துவிட மாட்டார் என நினைக்கிறேன் .

எது எவ்வாறு நடந்தாலும் மொத்தத்தில் கல்முனை மாநகரம் அதன் உயர்சியில் இன்னும் இறந்குவரிசைக்கே செல்லும் பொறுத்திருந்து  பாருங்கள்  எனவும் கூற மறக்கவில்லை அந்த முக்கியஸ்தர் .

Web Design by Srilanka Muslims Web Team