முஸ்லிம் காங்கிரஸ் காலி, மாத்தறையிலும் மரத்தில் போட்டி - Sri Lanka Muslim

முஸ்லிம் காங்கிரஸ் காலி, மாத்தறையிலும் மரத்தில் போட்டி

Contributors

நடைபெறவுள்ள தேர்தலில் தென் மாகாணத்திலும் மரம் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தனித்து போட்டியிட கட்சியின் உயர்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்திலும் தனித்து போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ad)

Web Design by Srilanka Muslims Web Team