முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் விடுத்த அழைப்பு சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவரால் நிராகரிப்பு…! » Sri Lanka Muslim

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் விடுத்த அழைப்பு சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவரால் நிராகரிப்பு…!

sainthamaru

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(எம்.எம்.நியாஸ் – சாய்ந்தமருது)


கல்முனை மாநகர சபையில் இணைந்து ஆட்சியமைக்க வருமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கையை நிராகரித்தார் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா.

ஆட்சியின் பங்காளர்களாக மாறி பட்டம் பதவி பெறுவதற்காக எங்களுக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை மாறாக உள்ளூராட்சி மன்றத்தை வென்றெடுக்கவே எமக்கு மக்கள் வாக்களித்தனர் எனவும் உள்ளுராட்சி மன்றம் ஒன்றே எமது இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று மாலை 5.00 மணியளவில் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் மக்கள் பணிமனையில்  இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் வெற்றியடைந்த உறுப்பினர்கள் அனைவரினதும் கையெழுத்தும் பொது மக்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டு ஜும்ஆ பள்ளிவாசலின் இவ் வெற்றியை கொண்டாடும் முகமாக கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

Web Design by The Design Lanka