முஸ்லிம் காங்கிரஸ் மேல்மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டி -ஹாபிஸ் நஸீர் - Sri Lanka Muslim

முஸ்லிம் காங்கிரஸ் மேல்மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டி -ஹாபிஸ் நஸீர்

Contributors

முஸ்லிம் காங்கிரஸ் மேல்மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடு மென அக்கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபை அமைச்சருமான ஹாபிஸ் நkர் அஹமட் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். நாங்கள் தனித்துக் கேட்டு வரலாறுகள் படைத்துள்ளோம். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிட்டு அதிகூடிய ஆச னங்களைக் கைப்பற்றி பங்காளிக்கட்சியானோம். அதேபோன்று மேல்மாகாண சபையிலும் தனித்துப் போட்டியிட்டு 7 ஆசனங்களைக் கைப்பற்றலாம் என எண்ணுகின்றோம்.

வடமாகாண சபைத் தேர்தலில் கூட நாம் மன்னார் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டு ஓர் ஆசனத்தைக் கைப்பற்றினோம்.

முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷை கள் தனித்துவம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நாம் தனித்துப் போட்டியிடும் போது எம்மில் காழ்ப்புணர்வு கொண்டவர்கள் தவறான பிரசாரங்களை எடுத்துச் செல்வது வழக்கம்.

எனினும் அரசாங்கத்துக்கும் எமக்குமிடையிலான உறவில் எந்தப் பங்கமும் இல்லை என்பதை நாம் தெளிவாகக் கூறி நிற்கின்றோம்.

நாம் தனித்துக் களமிறங்குவதன் மூலம் தமது இருப்புக்களில் பாதிப்பு வரும் என அஞ்சும் அரசியல்வாதிகளே முஸ்லிம் காங்கிரஸைப் பற்றித் தவறான பிரசாரங்களை முன்னெடுத்துச் செல்வதாக அவர் குறிப்பிட்டார்.

-Thinakaran

hafees naseer

Web Design by Srilanka Muslims Web Team