முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த 147 பாடசாலைகள் பறிமுதல் ! - Sri Lanka Muslim

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த 147 பாடசாலைகள் பறிமுதல் !

Contributors

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த 147 பாடசாலைகளை அந்நாட்டு கல்வி அமைச்சு பறிமுதல் செய்துள்ளது. சகோதரத்துவ அமைப்பின் சொத்துகள் மற்றும் செயற்பாடுகளை முடக்கும் அரச ஆணைக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எகிப்து தலைநகர் காசா, கீசா, அலக்சான்ட்ரியா என பல நிர்வாகப் பகுதிகளில் இருக்கும் பாடசாலைகள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த பாடசாலைகளின் நிதி மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப் பட்டுள்ளது.
தவிர மேலும் 85 பாடசாலைகள் குறித்து எகிப்து அரசு விசாரணை நடத்திவருகின்றது. பல உரிமை யாளர்களை கொண்ட இந்த பாடசாலைகளின் பெரும்பாலான உரிமையாளர்கள் முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்கள் என கூறப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் 147 பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சால் புதிய நிர்வாகிகளை பரிந்துரை செய்யப்பட் டுள்ளது.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களையும் பறிமுதல் செய்ய கடந்த செப்டெம்பர் 23 ஆம் திகதி கெய்ரோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

Web Design by Srilanka Muslims Web Team